பக்கம்:முல்லை மணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதிஞனே சிதை 97

சீதை சிரித்துக்கொண்டே, “இது ஒரு பெரிய காரியம் அன்று. ஏதாவது ஒலே இருந்தால் கொண்டுவா. என் கை நகத்தால் எழுதிக் காட்டுகிறேன்' என்ருள்.

உடனே குகியி அருகில் இருந்த விசிறி ஒன்றை எடுத்து, "எங்கே, இதில்தான் எழுது, பார்க்கலாம். கால் நகத்தைக் கண்டவள் கை நகத்தால் முழு உருவமும் எழுத வேண்டுமானல், நீ பெரிய ஓவியக்காரியாகத்தான் இருக்க வேண்டும்!” என்று அதைக் கொடுத்தாள்.

வஞ்சமில்லா கெஞ்சுடைய சீதை அந்த விசிறியில் இராவணன் உருவத்தை வரைந்து காட்டிள்ை.

'நீ மிக்க சாமர்த்தியமுடையவள், அண்ணி. அந்த இராவணன் பெரிய பலசாலியென்றே தோன்றுகிறது' என்று வியந்துவிட்டுக் குகியிபேசிக்கொண்டே இருந்தாள். சீதை அப்படியே கண் அயர்ந்துவிட்டாள். சூழ்ச்சி யில் வல்ல கைகேயியின் மகள் இராவணன் உருவெழுதிய விசிறியைச் சீதையின் மார்பின்மேல் மெல்ல வைத்து விட்டு, இராமனிடம் சென்ருள்."அண்ணு, உன் மனைவியை வந்து பார்! அவள் மனம் என்ன கினேத்துக்கொண்டிருக் கிறதோ!' என்று கூறினுள். x

இராமன் அந்தப்புரம் சென்று சீதையைக் கண்டான். அவள் ஒரு கவலையும் இன்றி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் மார்பில் இருந்த விசிறியைக் குகியி சுட்டிக் காட்டினள். அதைப் பார்த்தான் இராமன். பத்துத் தலையும் இருபது கைகளுமாக இராவணன் அதில் விளங்கினன். - -

இராமன் அதைப் பார்த்துவிட்டு, குகியியின் முகத் தைப் பார்த்தான். அவள் கண்களில் இகழ்ச்சிக் குறிப்புக் கொந்தளித்தது. "உன் மனேவியின் எண்ணம் யாரிடம் இருக்கிறது தெரிகிறதா?’ என்று அந்தக் கண்கள் கேட்டன. w - -

7سسة من عريج

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/103&oldid=619717" இலிருந்து மீள்விக்கப்பட்டது