பக்கம்:முல்லை மணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 முல்க் மணம்

உலகத்துக்கே எடுத்துக்காட்டாக வாழவந்த இராமன், 'ஊர் வாயை மூட உலே மூடி இல்லை என்பதை உணர்க் தான். சீதையை எழுப்பி, 'இந்த உருவத்தை யார் எழுதி யது' என்று கேட்டான். குழங்தை உள்ளம் படைத்த சீதை, தான் எழுதியதாகச் சொன்னுள்.

'சி! இன்னும் உனக்கு அவன் கினைவு போக வில்லையா?” என்று கடிந்துகொண்டு, உடனே லட்சுமணனே அழைத்தான் இராமன்.

'லட்சுமணு இந்தக் கணத்திலேயே இவளேக் காட்டில் தொண்டுபோய் விட்டுவிட்டு வா” என்று கட்டளையிட் டார். அப்போது குகியியின் அகமும் முகமும் மலர்ந்தன.

ஒரு வண்ணுன் குறை கூறியதைக் கேட்ட இராமன், சீதையைக் காட்டுக்குப் போகச் செய்தான் என்பது உத்தர ராம சரித்திரம்கூறுவது.அதைஏற்றப்பாட்டும்சொல்கிறது:

அந்தவண்ணு ளுலே

அல்லற்பட்டாள் சீதை ஏழைவண்ணு ளுலே

சீதைவனம் போனுள்.

என்று கூறுகிறது. ஆயினும், மேலே சொன்னபடியும், ஒரு கதை பாரத காட்டில் வழங்கி வந்திருக்கிறது. அது, முதலில் எங்கே தோன்றியதோ தெரியவில்லை. வங்க மொழிக் காவியத்திலும் தமிழ் நாடோடிப் பாடலிலும் இருக்கிறது.

மனித இயல்புகளைக் காட்டி இக்காலத்தில் கதைகளைப் புதிய கற்பனையாக எழுதுகிருர்கள். அந்தக் காலத்தில் தெரிந்த கதாபாத்திரங்களே வைத்துக்கொண்டு கதை கட்டுவது வழக்கம். இராமன் எத்தனே இடங்களுக்குப் போய் எவ்வளவு லிங்கப் பிரதிஷ்டை பண்ணினன் என்ப தற்குக் கணக்கு வழக்கே இல்லை. அவன் அந்த அந்தத் தலத்தில் வந்து செய்த செயல்களைத் தல புராணங்களில் காணலாம். அந்த வகையில் எழுந்தது ? இந்தக் கதையும் என்று கொள்வதே பொருத்தமாகும். ; : . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/104&oldid=619718" இலிருந்து மீள்விக்கப்பட்டது