பக்கம்:முல்லை மணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அவர் காணுத து

இராமாயணம், பாரதம் என்னும் இரண்டும் இதி காசங்கள் என்று சொல்லப் பெறும். இந்த இரண்டும் இமயம் முதல் குமரிவரையில் பரவி வேரூன்றிவிட்டன. இவற்றின் மூலம் வடமொழியில் இருந்தாலும், பாரத நாட்டு மொழிகள் எல்லாவற்றிலும், இவ்விரண்டும் கவிஞர்களால் மொழி பெயர்த்தும், தழுவியும் அமைக்கப் பெற்றிருக்கின்றன. இவற்றையன்றி, இந்த இரண்டு பேரிதி காசங்களிலிருந்து சில பகுதிகளே எடுத்துத் தனி நூல்க எrாகப் புலவர்கள் இயற்றியிருக்கிரு.ர்கள். நாடோடிப் பாடல்களிலும் இவற்றின் பகுதிகள் புகுந்திருக்கின்றன. இவ்விரண்டினுடைய சம்பந்தமாக அந்த அந்த மொழிகளி லுள்ள பழமொழிகள் பல பல.

வால்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினர் வியர்சர் பாரதத்தை இயற்றினர். தமிழில் இவை சம்பந்தமான நூல்கள் இருக்கின்றன. அந்த மூல நூல்களில் காணப்படாத பல கதைகள் நாடோடியாக வழங்கி வருகின்றன. அவை நிகழ்ந்த இடமென்று சில இடங்களைக் குறித்து அடையாளமும் காட்டுகிருர்கள்.

அவற்றைக் கொண்டு அவை அவ்விடங்களில் நிகழ்ந் தன என்று கொள்ளக்கூடாது. மக்களுக்கு இராமா யணத்திலும் பாரதத்திலும் உள்ள அளவற்ற ஈடுபாட் டையே அவை காட்டும். இராமன் வந்து பூசித்ததாகப் பல வரலாறுகள் சொல்லுகின்றன ; பீமன் வழிபட்டதாகப் பல இடங்கள் உண்டு. வரலாற்று முறையில் இவற்றை ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அன்பு காரணமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/105&oldid=619719" இலிருந்து மீள்விக்கப்பட்டது