பக்கம்:முல்லை மணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முல்லை மணம்

எல்லாரும் துரங்கும்போது தூங்காமல் வேலை செய் பவர்கள் இருக்கிருர்கள். அவர்களுக்கு அப்படிச் செய்வது கடமை. அதற்காகவே அவர்கள் இருக்கிருர்கள். ஊரில் திருடர்களால் தீங்கு வராமல் காவல் புரியும் நகர்காவலர் அவர்கள். அவர்கள் விளக்கு, தடி, உரத்த குரல் இவற் ருேடு ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அங்கங்கே குரல் கொடுத்துக்கொண்டு போனர்கள். இரவின் அழுத்த மான கைகள் அவர்களையும் அணேத்துக்கொண்டன. அந்த கள்ளிரவில் அந்தக் காவலர்களும் துங்கிப் போளுர்கள்.

தன் குழந்தை நோய்வாய்ப்பட்டது கண்டு அதற்கு வேண்டிய உணவும் மருந்தும் கொடுப்பதற்காகத் தாய் விழித்திருக்கிருள். அடிக்கடி குழங்தை சிணுங்கிக் கொண்டே இருக்கிறது. அவள் அதற்கு வேண்டிய இதமான செயல்களைப் புரிகிருள். இரவு நெடுநேரம் வரையில், அவள் ஒன்று போக ஒன்று செய்துகொண்டே இருக்கிருள். கள்ளிரவு வந்தது. குழந்தை அழவில்லை. அதனிடம் உள்ள நோயும் சற்றே கண் உறங்கியிருக்க வேண்டும்! ஆகவே, அன்புருவமான தாயும் சற்றே கண்ணை மூடிக்கொண்டாள். எப்போதும் குரைக்கும் நாய் தாங்கு கிறது. இரவிலே நடமாடும் இயல்புள்ள பேயும் துரங்கு கிறது. எங்கும் ஒரே இருள்; அமைதி. .

ஆகுல்....?

இந்த கள்ளிரவில் பயங்கர மோனத்துக்குச் சாட்சி யாக ஓர் உயிர் விழித்துக்கொண்டே இருக்கிறது. கடவுளேச் சொல்லவில்லே. காதலனைப் பிரிந்து, அவன் இன்று வருவானே நாளே வருவானே! என்று காத்துக் கிடக்கும் காதலி ஒருத்தி மட்டும் துயிலாமல் விழித்துக் கொண்டிருக்கிருள். அவள் இமைகள் எவ்வளவு முயன் ருலும் மூடிக்கொள்வதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/114&oldid=619729" இலிருந்து மீள்விக்கப்பட்டது