பக்கம்:முல்லை மணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயிலாத காதலி

எங்கே பார்த்தாலும் இருள்; குழந்தைகள் எல்லாம்

கதிரவன் மறைந்தவுடன் உணவு உண்டு படுத்துக்கொண்டு. விட்டார்கள். விளையாட்டுப் பிள்ளைகள் இரவில் சிறிது

நேரம் கலகல வென்று பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு

அவர்களும் துரங்கிவிட்டார்கள். வீட்டு வேலை செய்யும்

தாய்மார்கள் எல்லாருக்கும் உணவு அருத்திவிட்டு, பாத்தி ரங்களைக் கழுவி வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுச் சிறிது

நேரம் வீட்டுக்காரரோடு எதையோ பேசிக்கொண்டிருக் தார்கள். அவர்களும் இப்போது துரங்கிவிட்டார்கள்

போல் இருக்கிறது.

வயசான கிழவர்களுக்கு எளிதில் தூக்கம் வருகிற தில்லை. யாரிடமாவது நெடுநேரம் வரையில் தம் காலத்துப் பழங்கதையைப் பேசிக்கொண்டே இருப்பார்கள். கேட் பவர்கள் கொட்டாவி விடுவார்கள். ஆனலும் அந்தக் கிழவர்கள் விட மாட்டார்கள்; அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கூட அல்லவா இப்போது உடம்பைக் கிடத்தித் துயில்கிருர்கள்?

ஊரில் இரவு நேரமானலும், தம் வேலையைச் செய்யும் சில ஏழைத் தொழிலாளிகள் இருக்கிருர்கள். எவ்வளவு கேரம் அவர்கள் விழித்துக்கொண்டு வேலை செய்கிருர், களோ அவ்வளவுக்கு அவர்களுக்கு லாபம் உண்டு. பொருள் அவர்களே விழித்திருக்கச் செய்கிறது. ஆணுலும் அவர்களும் மனிதர்கள் தாமே? அவர்களுக்கும் அலுப்பினல் கண்கள் இழுத்தன. அவர்களும் படுத்து உறங்கு. கிருர்கள். . . . -- - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/113&oldid=619728" இலிருந்து மீள்விக்கப்பட்டது