பக்கம்:முல்லை மணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயிலாத காதலி 芷芷

தன்னைப் பார்த்து மற்றவர் இரங்கவேண்டிய நிலையில் இருப்பவள் இரவைப் பார்த்து, "ஐயோ பாவம்' என்று இரங்குகிருள்.

- וr வேறு ஒருத்தி தன் தனிமைக்குத் துனேயாக மற். ருென்றைக் கண்டாள். அவள் கடற்கரையில் உள்ள ஊரில் வாழ்கிற பெண். காதலன் பிரிந்து போயிருப்பத ல்ை இரவு நேரங்களில் தாக்கமின்றிப் புரளுகிருள். அவ ளுடைய காதலன் காளத்தியில் எழுந்தருளி யிருக்கும் சிவ பெருமான். அவளே கமக்கு அறிமுகப்படுத்துகிற புலவர் நக்கீரர். கைலே பாதி காளத்தி பாதி அந்தாதியில் அறிமுகப் படுத்துகிரு.ர்.

இரவில் தனிமைத் துயரம் மிகுந்து தோன்றுகிறது. உலகம் முழுவதும் அவளே ஒதுக்கி வைத்துவிட்டுப் பாயலில் துரங்குகிறது. அவளோ தனிமையில் ஏங்கித் தவிக்கிருள். ஒருத்தராவது ஏன் என்று கேட்கவில்லையே' என்று வாடு கிருள். ஊர் என்ருகத் துரங்குகிறதைக் கவனிக்கிருள். அந்தத் துாக்கத்தினிடையே 'சோ' என்ற ஓசை கேட்கிறது. இடையீடு இல்லாமல் அந்த ஓசை இருப்பதல்ை அது மோனத்தில் கரைந்துவிடுகிறது; அல்லது மோனந்தான் அதில் கரைந்துவிடுகிறதோ? உற்றுக் கவனிப்பதற்கு முன்னல் அந்த ஓசையைப் பற்றிய உணர்வே வரவில்லை. இப்போது தெளிவாகத் தெரிகிறது. கடல் அல்லவா அப்படி முழங்குகிறது:

அந்த இளம் பெண்ணுக்கு இப்போது சிறிது ஆறுதல் உண்ட்ாகிறது. இந்தக் கடலும் கம்மைப்போல் விழித் இருக்கிறது என்ற கினேவே அந்த ஆறுதலே உண்டாக்கு கிறது. பின்னும் கவனிக்கிருள். கம்மைத்தான் காளத்தி யான் பிரிந்து சென்ருன்; தாங்காமல் இருக்கிருேம். இந்தக் கடலுக்கு என்ன வந்தது. இது சுகமாக அலேயடங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/117&oldid=619732" இலிருந்து மீள்விக்கப்பட்டது