பக்கம்:முல்லை மணம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{4 முல்லை மணம்

ஊர் என்று சொன்னுலும் அவளுக்குத் தோழியின் மேல்தான் கோபம். அவள் ஒருத்தியையாவது துணையாகக் கொண்டு இரவுப் பெருங்கடலே நீங்தலாம் என்று நம்பி யிருந்தவள் அவள். அந்தத் தோழியும் தூங்கிப் போளுல் அவள் என்ன செய்வாள், பாவம்! -

இந்தப் பாழாய்ப்போன ஊர் இப்படித் துரங்குகிறதே! நான் என்ன செய்வேன். அவர்களேப் போய்த் த&லயால் முட்டி எழுப்பட்டுமா? அல்லது கழியை எடுத்து அடித்து எழுப்பட்டுமா? என்ன அக்கிரமம் ஒரு பேதை தனியாகத் துயரக் கடலில் மூழ்கி அலமருகிருளே என்ற இரக்கம் வேண்டாம்? ஓவென்று இரைந்து கூவி எல்லாரையும் எழுப்பிவிடட்டுமா? காரணம் இல்லாமல் கூவக்கூடாது. உரத்துக் கத்துகிறேன். எழுந்து வந்து, ஏன் இப்படிக் கத்தினுய் என்று கேட்டால், ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொள்கிறேன். திருடன் வந்தான் என்று சொல்கிறேன்; பாம்பு வந்தது, பயமாக இருந்தது என்று கூறுகிறேன்: பேய் வந்து பயமுறுத்தியது என்று சொல் கிறேன். அவற்றையெல்லாம் கம்பமாட்டார்கள் என்ருல், வயிற்றுவலி தாங்க முடியவில்லேயே என்று அலறுகிறேன். ஏதாவது காரணம், ஒரு பெற்றி மேல் இட்டு, கூவக் கூடாதா? என்ன செய்வது? ஒன்றும் தெரியவில்லையே!”

இப்படி அவள் சொல்வதாகப் பாடுகிருர் ஒளவையார்.

முட்டு வேன்கொல். தாக்கு வேன்கொல்? ஒரேன்; யானும்ஒர் பெற்றிமேல் இட்டு, ஆஆ. ஒல்’ எனக் கடவு வேன்கொல்? அலமரல் அசைவளி அலைப்பஎன் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே !

(சுழன்று அசையும் காற்று வருத்த, என் வருத்தத் தரும் காதல் நோயைத் தெரிந்துகொள்ளாமல் கவலேயின்றித் தாங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/120&oldid=619735" இலிருந்து மீள்விக்கப்பட்டது