பக்கம்:முல்லை மணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறன் களிறு #31

பட்டத்து யானேயாகிய அதற்கு ஒரு மனையாட்டி உண்டு. ஊர்வலம் வரும்போது, களிற்றின் அலங்காரத் தைக் கண்டு களிக்கும் இயல்புடைய பிடி அது; ஆண்மை யின் அடையாளமாகிய கொம்புகளைக் கண்டு களிப்பது. தன் துதிக்கையில்ை அவற்றைத் தடவித் தடவிப் பார்த் துப் பூரிக்கும்.

இப்போது சற்றே அழகிழந்த அந்தக் கொம்புகளோடு போய்ப் பிடி முன் கிற்க வேண்டுமே என்ற நினைவு களிற்றுக்கு வருகிறது. தன் கொம்புகளே மறைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று எண்ணுகிறது. மறைப் பது எப்படி? பகை மன்னவருடைய குடர்களே அந்தக் கொம்புகளில் கோத்துக்கொள்கிறது. தன் வீரத்துக்கு அடையாளமாக அவை விளங்கும்; அதோடு, அழகிழந்த கொம்புகளேயும் மறைக்கும். வீரச் செயல் முடிந்தவுடன் அதற்குப் பிடியின் நினைவும் காதலும் தோன்றுகின்றன. அதல்ை இப்படிச் செய்கிறது.

அடுமதில் பாய அழிந்தன கோட்டைப் - பிடிமுன்பு அழகழிதல் நாணி-முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே, செங்க்னல்வேல் தென்னவர் கோமான் களிறு. (மதில்மேல் பாய, அதனுல் அழிந்தனவாகிய கொம்புகளே, முடியுடை மன்னர் - முடியையணிந்த சோழ சேர மன்னர்கள்.)

  • போர்க்களம் இப்போது பிணக்காடாகக் காட்சி அளிக்கிறது. பாண்டியன் வெற்றி கொண்டான். பகை யரசர் போரிலே பட்டனர். அவர்களுடன் வந்த வீரர்களும், அழிந்தனர். வீரம் கனன்ற போர்க்களத்தில் இப்போது ஒரே அழுகை. இறந்துபோனவர்களின் மனைவிமார் வந்து புலம்புகிருர்கள். சிறந்த கற்புடைய மங்கையர் எரி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/127&oldid=619742" இலிருந்து மீள்விக்கப்பட்டது