பக்கம்:முல்லை மணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£30 முல்லை மணம்

திறக்க முடியாது. யானைகளே மதிற் கதவின்மேல் மோத விடுவார்கள். அப்போது கதவின் தாழும் பிறவும் ஒடிந்து திறந்துவிடும்.

இங்கே, பல யானைகள் வேண்டும் என்பது இல்லை. இந்த யானே தன்னுடைய கொம்பால் மதிற்கதவைத் திறந்துவிடும். இரண்டு கொம்பால் கூட அன்று; ஒரு கொம்பாலேயே குத்திக் கதவைத் திறந்துவிடும். ஊருக்குள் புகும்போது ஒரு கொம்பைக் கொண்டு வீரங்காட்டிய அது, போருக்குள் புகும்போது மற்ருெரு கொம்பைப் பயன்படுத்தும். பகையரசர்களுடைய மார்டை உழுவதற்கு அந்தக் கொம்பு கொழுவைப் போலப் பயன்படுகிறது.

இப்படி இது தன் இரண்டு கொம்புகளுக்கும் தனித் தனியே வேறு வேறு வீரச் செயலே வைத்துக் கொண்டிருக் கிறதாம். . -

உருவத்தார்த் தென்னவன் ஒங்கெழில் வேழத்து இருகோடும் செய்தொழில் தேரின்-ஒருகோடு வேற்ருர் அகலம் உழுமே; ஒருகோடு மாற்ருர் மதில் திறக்கு மால். (உருவத்தார் - அழகுடைய மாலையை:அணிந்த, தென்னவன்பாண்டியன்; தேரின் யோசித்தால்; வேற்ருர் அகலம் - பகைவ ருடைய மார்பை மாற்றர் - பகைவர்.)

jor

மதிற் கதவின்மேல் பாய்ந்தும் மதிலேயே தாக்கியும் அதன் கொம்பு தன் பளபளப்பை இழந்து கிற்கின்றன. வழு வழுப்பும் பளபளப்பும் உள்ளதாக இருக்கும் அந்தக் கொம்புகள், சுரசுரப்பாகச் சிறிதே மழுங்கி யிருக்கின்றன. மறுபடியும் பாகர்கள் அவற்றைச் செம்மைப் படுத்திவிடு வார்கள். இப்போது வீரன் தன் மெய்யிலே பட்ட புண் ளுேடு நிற்பது போல இருக்கின்றன, கொம்புகள். , ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/126&oldid=619741" இலிருந்து மீள்விக்கப்பட்டது