பக்கம்:முல்லை மணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறன் களிறு 119

என்று தலே கவிழ்வான். இந்த மிடுக்கில் ஒரு பகுதி காம் கடன் வாங்கிக் கொள்ளலாமா? என்று அவன் கினேப்பான். ஒரு பண்டத்தை அளவு குறித்து வாங்கிக் கொண்டு, பிறகு திருப்பிக் கொடுப்பது குடும்பங்களில் வழக்கம். அதைப் பழங்காலத்தில் குறியெதிர்ப்பை என்று சொல்வார்கள். கூற்றுவன் மாறனுடைய யானையி னிடம் சில காலம் அதன் வீரத்தைக் கடன் வாங்கிக் கொள்ள - குறியெதிர்ப்பை கொள்ள - நினைக்கிருளும்.

புலவர் இப்படி ஒரு வகையில் மாறன் களிற்றை வருணித்தார்.

தோற்றம் மலே;கடல் ஓசை; புயல்கடாம்;

காற்றின் நிமிர்ந்த செலவிற்ருய்க்-கூற்றும்

குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எங்கோன்

எறிகதிர்வேல் மாறன் களிறு. • .

(புயல் கடாம் - மழையே அதன் மதம்; காற்றின் நிமிர்ந்த செலவிற்ருய் - காற்றைப் போல மோதி எழுந்த நடையை உடை யதாய்; கூற்றும் எமனும், குறியெதிர்ப்பை கொள்ளும் - கடன் வாங்கிக் கொள்ளும்; எறிகதிர் வேல் வீசுகின்ற சுடர் விடும் வேல்.)

. ★ . .

யானேக்கு இரண்டு கொம்புகள் உண்டு. இந்த யானே இரண்டு கொம்பாலும் ஒரு காரியத்தைச் செய்வ தில்லை. ஒரு பக்கத்துக் கொம்பை அழுத்தி ஒன்றைச் செய்கிறது. மறு பக்கத்துக் கொம்பை அழுத்தி மற்ருெரு வீரச் செயலைச் செய்கிறது. * * - - .

பகையரசர்களுடைய ஊரின்மேல் பாண்டியன் படை யெடுத்துச் செல்வான். அவ்வூரில் மதிலைக் காவல் செய் வார்கள். மதிற் கதவுகளே இறுகத் தாழிட்டுக் கணைய மரங்களைப் போட்டிருப்பார்கள். வீரர்களால் அதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/125&oldid=619740" இலிருந்து மீள்விக்கப்பட்டது