பக்கம்:முல்லை மணம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jić முல்லை ம்னம்

(மருப்பு - கொம்பு, ஊசி - எழுத்தாணி, மறம் கனல் - வீரம் கனல்கின்ற கிருத்தகு - அழகினுல் தகுதிபெற்ற, ஒலே - பனை ஏடு; கிருத்தக்க - செல்வம் நிரம்பிய மொய் இலே வேல் - வண்டுகள் மொய்க்கின்ற இலையை யுடைய வேலைப் பெற்ற, மாறன் - பாண்டியன்.) -

இதோ மாறன் களிறு படுவேகமாக வருகிறது. அது வருகிற வேகத்தைப் பார்த்தால், இன்று போர்க்களம் முழுதும் பிணக்காடு ஆகிவிடும் என்று தோன்றுகிறது. இது யானையா? அல்ல, அல்ல; மலேயும், கடலும், மேகமும், சண்டமாருதமும் சேர்ந்து, ஒருருவம் எடுத்து வருவது போல இருக்கிறது. அப்பா என்ன பயங்கரமான தோற்றம்! பாண்டியன் திருவீதியில் உலா வருகையில் பொன்னும் மணியும் பூண்டு மெல்ல கடக்கும் களிரு இது? இதற்கு இத்தனே வீரம் எங்கிருந்து வந்தது? இதன் தோற்றத்தைப் பார்த்தால் மலேபோல இருக்கிறது. பெரிய மலே காலு கால் படைத்து வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது. கடலே எழுந்து வருவது போல இருக்கிறது. இதன் ஒசை. இப்போது இது மதம் பட்டிருக் கிறது. மதம் மழைத்தாரைபோலக் கட கட வென்று ஊற்றெடுத்துப் பொழிகிறது. வேகமோ சொல்லத்தர மன்று; கடுங்காற்றைப்போல வருகிறது. .

இதன் ஆவேசப் போக்கைப் பார்த்தால், இது எத்தனை பேரைப் பலி வாங்குமோ தெரியாது. இது யானையா? இல்லை, இல்லே. கூற்றுவனுடைய வேற்றுருவம் போலும் கூற்றுவன் கண்ணுக்குத் தெரியமாட்டானே! அவன் இப்படி ஒரேயடியாகப் பலரைக் கொல்லும் ஆற்றல் படைத்தவன? அது ஐயத்துக்குரியது.

இந்தக் களிற்றைக் கண்டால் கூற்றுவனும் நாணு வான். இதற்கு இருக்கும் மிடுக்கு நமக்கு இல்லையே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/124&oldid=619739" இலிருந்து மீள்விக்கப்பட்டது