பக்கம்:முல்லை மணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறன் களிறு 11?

யானே செய்த செயல்களே மனக்கண்ணிலே ஆற அம

கினைத்துப் பார்க்கிருர் புலவர். பாண்டியனைப் பகைத்த மன்னர்கள் யாவரும் போர்க்களத்தில் வீழ்கிருர்கள். யானை, தன் கொம்பினல் அவர்கள் மார்பைக் குத்துகிறது. அதற்குக்கூடத் தலேயாய வீரம் இருக்கிறது. பகைவர் களின் முதுகில் குத்துவது வீரத்துக்கு இழுக்கு என்று அதற்குப் பழக்கத்தால் தெரிந்திருக்கிறது. அதன் கூர்மையான கொம்பு பகையரசர் மார்பில் அளேகிறது. புலவருக்கு இப்போது ஏடும் எழுத்தாணியுமே கினைவுக்கு வருகின்றன.

"நாம் கவி எழுதுவது போல இந்த யானையும் எழுது கிறது!’ என்று அவர் எண்ணினர். அவர் எழுதும் கவி பாண்டியனுடைய புகழைக் காட்டுவது. யானையும் அதையே செய்கிறதாம். பாண்டியனுடைய புகழை எப்படி எழுதுகிறது. பகை மன்னருடைய நாடுகள் யெல்லாம் இனிப் பாண்டியன் கைக்கொண்டான் என்று எழுதுகிறதாம். யானே தன் கொம்பையே எழுத்தாணி யாகக் கொண்டு, பகையரசருடைய அகன்ற மார்பை ஒலே யாக வைத்து, இந்த உலகம் முழுவதும் எங்கள் பாண்டிய லுக்கு உரியது என்று எழுதுகிறதாம். பாண்டியைேடு ஒட்டி உறவாடும் உணர்ச்சியால், வையகம் எல்லாம் எமது என்று எழுதுகிறது. ஆம்! இனி அந்த யானேயின் மேல் பாண்டியன் எல்லா இடங்களிலும் உலா வரலாம் அல்லவா? - - -

புலவருக்கு ஏடும் எழுத்தாணியும் கினேவுக்கு வருவது இயல்புதானே? - - -

மருப்பு:ஊசி யாக மறங்கனல்வேல் மன்னர் திருத்தகு மார்போலே யாகத்-திருத்தக்க வையகம் எல்லாம் எமதென் றெழுதுமே, மொய் இலவேல் மாறன் களிறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/123&oldid=619738" இலிருந்து மீள்விக்கப்பட்டது