பக்கம்:முல்லை மணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறன் களிறு

பெரிய போர் அது; பாண்டியனுக்கும் அவனுடைய பகைவர்களுக்குமிடையே எழுந்த போர். தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்று வகை வகையாகப் படை சிறந்து கிற்கிறது. வீரர்கள் தம் வீரத்தைக் காட்டுவது கிடக்கட்டும்; அந்தப் படையில் உள்ள யானேகளுக்குத்தான் எத்தனே அறிவு! அவற்றிலும், பாண்டிய மன்னனுடைய பட்டத்து யானே செய்யும் வீரச் செயல்கள் வியப்பிலும் பெரு வியப்பைத் தருகின்றன. போர்க் களத்தில் நிகழும் செயல்களைப் பார்த்தால் கதி கலங்குகிறது. ஆனால், இந்த யானேயின் செயலோ பார்க்கப் பார்க்க வியப்பூட்டுவதாக இருக்கிறது.

பகைவர்களைச் சாய்த்துக் குத்துகிறது, தன் கொம்பி பினுல். களிற்றை எதிர்த்துக் கொல்வது பெரிய வீரம். மற்ற யானைகளே எதிர்ப்பதுபோல, இந்த யானேயையும் எதிர்க்கிருர்கள், பகைப்படையில் உள்ள வீரர்கள். பாவம்! இதன் பெருமை அவர்களுக்குத் தெரியாதோ? அல்லது மறந்துதான் போளுர்களோ? எதிரியின் படையில் ஒரு மன்னர் அல்ல, பல மன்னர்கள் இருக்கிருர்கள்; ஒருவ ருக்கு ஒருவர் துணையாக வந்தவர்கள். அவர்களே யெல்லாம் சாடிக் கலக்குகிறது யானே. -

பாண்டியனது வீரச் செயலேப் பாடும் புலவர்கள், இந்த யானையின் விறலேயும் பாட வேண்டுமென்று முந்துகிருர் கள். யானே பரிசில் கொடுக்கப் போகிறதா? இல்லை. ஆளு லும் வியப்புணர்ச்சி அவர்களைப் பாடும்படி உந்துகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/122&oldid=619737" இலிருந்து மீள்விக்கப்பட்டது