பக்கம்:முல்லை மணம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன் உலா 135

கொண்டிருக்கிறது. 'அவன் அரசன், நாம் குடிமக்களுள் ஒருத்தி. அவனைக் காதலிக்க நமக்கு உரிமையும் இல்லை; தகுதியும் இல்லை என்று அந்தப் பேதை எண்ணவில்லை. உணர்ச்சி பொங்கும்போது இவ்வாறெல்லாம் ஆராய் வதற்கு வாய்ப்பு இராது. - -

இது நிகழ்கின்ற இடம் உறையூர். சோழ அரசன்மீது அந்த இளம் பெண் காதல் கொண்டிருக்கிருள். தன் அகத்தே உருவெழுதிப் பார்க்கும் உறங்தையர்கோன் இன்று திருவீதியில் உலா வரப்போகிருன்என்பதை அறிந்த போது, அவளுக்குத்தான் எத்தனே இன்பம்! ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாக இருக்கிறது. அவனைத் தன் கண்ணுரக் கண்டு நெடுநாளைய ஆவலேப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று அவள் காத்திருக்கிருள்.

நாம் கினைக்கிறபடியே எல்லாம் கடந்தால் இந்த உலகமே சொர்க்கமாகிவிடும். அப்படித்தான் கடக்கிற தில்லையே! அந்த இளம்பெண்ணின் ஆசையை ஒருவாறு அவளுடைய தாய் அறிவாள். தன் தோழிமாரோடு அப் பெண் சில சமயங்களில் சோழனேப்பற்றி ஆர்வத்தோடு பேசுவதைக் கேட்டிருக்கிருள். இந்தப் பெண் என்ன, அரச குலத்தில் பிறந்தவளைப் போலவும் பெருஞ் செல்வர். பெண்ணேப்போலவும் கனவு காண்கிருளே! இவளுக்கு அழகு மட்டும் இருந்தால் போதுமா? அரசன் எங்கே, இவள் எங்கே இவள் ஆசைக்கும் அளவு வேண்டாமா? என்று கினைத்ததுண்டு. ஆசைக்கு ஓர் அளவு இல்லை என்பது அவள் அறியாததா? r

தன் மகளின் உள்ளத்தே. சோழன்மேல் ஆசை வளர் கிறதை அவள் ஊகித்துக்கொண்டாள். 'எட்டாப் பழத் துக்குக் கொட்டாவி விடுகிருளே’ என்று அங்கலாய்த் தாள். அடி பாவிப் பெண்ணே நீ என் வயிற்றில் பிறந் தாயே! என்று இரங்கினுள். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/131&oldid=619746" இலிருந்து மீள்விக்கப்பட்டது