பக்கம்:முல்லை மணம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன் உலா

அரசன் உலா வரப் போகிருன் என்பதை முர சறைந்து தெரிவித்தார்கள். ஊர் முழுவதும் அலங்கரித் திருக்கின்றனர். வீதிதோறும் தோரணம், பந்தல், கொடி கள். கமுகங்குலேயும் தெங்கின் குலேயும் தொங்கவிட்டு, மலரும் மாலேயும் கிறைகுடமும் விளக்கும் எடுத்து, இந்த உலாவைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிருர்கள் மக்கள். எங்கே பார்த்தாலும் மகிழ்ச்சி ஆரவாரம்.

அரசன் பேரழகன்; அவன் அழகைவிடப் பின்னும் சிறந்தது அவன் வீரம். அவன் மார்பகலமும் தோளுயர மும் கட்டழகுடைய பருவ மங்கையரின் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையுடையன. அவன் அழகைக் கண்ட மங்கையர் பிறிதொன்றை அவாவாமல், அதுவே கினே வாகக் கிடப்பார்கள்: இது ஊர் அறிந்த உண்மை.

அரசன் உலா வரும்போது அவரவர்கள் தங்கள் தங்கள் வீட்டை அணி செய்து வைக்கின்றனர். வாயிற் கதவைத் திறந்து, மங்கலப் பொருள்களே வாயிலில் வரிசை யாக வைக்கின்றனர். தம் அரசனுடைய வீரத்தி லும் வெற்றி மீடுக்கிலும் பெருமிதங்கொள்ளும் குடி மக்க ளுக்கு அவனுடைய காட்சி அளவற்ற இன்பத்தைத் தருவ தல்லவா?

ஒரு வீட்டில் அழகு கிரம்பிய கன்னி ஒருத்தி இருக் கிருள். அவள் அரசனுடைய பேரழகைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிருள். தன்னுடைய உள்ளத்தே கற்பனை யினல் அவனுடைய உருவத்தைக் கண்டு களிக்கின்றவள். அவள் மனம் கட்டுக்கடங்காமல் அரசனேயே வினைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/130&oldid=619745" இலிருந்து மீள்விக்கப்பட்டது