பக்கம்:முல்லை மணம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன் உலா 13?'

ஊரெல்லாம் அரசன் பவனியைக் கண்டு ஆர்வாரத் தோடு வரவேற்று விழாக் கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டிருக்க, அவள் மட்டும் இந்த விழாவில் கலந்து கொள்ளாமலே இருந்துவிடுவதென்று முடிவு கட்டிவிட் டாள். ஊரார் அது கண்டு பழிக்கலாம். ஆனால், தன் மகளுடைய அவல கிலே வெளிப்பட்டுப் போளுல் அப்பொழுது உண்டாகும் பெரும் பழிக்கு இது எவ்வளவோ குறைவல்லவா? அதனல், எந்த அரசன் எந்தப் பட்டணம் போனலும் தன் வீட்டுக் கதவை அடைத்துக்கொண்டு, தன் மகளே உள்வைத்துக் காவல் புரிவதே தன் கடமை என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். .

அங்கே அரசன் பவனிக்கு ஏற்பாடு ஆகிறது. இங்கே அவன்மேல் காதல் கொண்ட அணங்கின் சிறைக்கு ஏற்பா டாகிறது. -

அந்தப் பெண்ணின் தோழிக்கு அன்னேயின் எண்ணம் ஒருவாறு புலயிைற்று. வீட்டில் ஓர் ஆரவாரத்தையும் காணவில்லை. அலங்காரம் ஒன்றும் செய்யவில்லை. அதற்குக் காரணம் என்னவென்று விசாரிக்கும்போது அவளுக்கு அன்னேயின் கருத்துத் தெரிந்தது.

நெடுந்துாரத்தில் முரசுகள் முழங்கின. அந்த ஒவி இங்கே கேட்டது. இசைக் கருவிகள் இயம்பின. அந்த இளம் பெண் தன்னை அலங்கரித்துக் கொண்டாள் அதைக் கண்டு அன்னேக்கு அச்சம் மிகுதியாயிற்று. "எதற்காக இந்த அலங்காரம்?' என்று கேட்டாள்.

'அரசர் வருகிருரே! திருவீதியில் வரும்போது போய்க் காணலாம் என்று நினைக்கிறேன்.' * ... . போடி, வெட்கங் கெட்டவளே! கல்யாணமாகாத கன்னிப் பெண் வீதியில் போகிருளாம்! வீதியிலே போகிற வனப் பார்க்கப் போகிருளாம்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/133&oldid=619748" இலிருந்து மீள்விக்கப்பட்டது