பக்கம்:முல்லை மணம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - முல்லை மணம்

'நீ என்ன அம்மா சொல்கிருய்?”

"சொல்ல வேண்டியதைத்தான் சொல்கிறேன். உன் திருட்டுப் புத்தி எனக்குத் தெரியும். அரசர் பவனியை நீ பார்க்கக் கூடாது. வீதியிலே போய் கின்று பித்துப் பிடித்தவளைப் போல நீ பார்க்க, உன்னே நாலு பேர் பார்க்க காளேக்கு என் மண்டைதான் உருளும். நீ வீட்டுக் குள்ளேயே அடைந்து கிட,’-இப்போது அன்னே சினத் துடன் பேசிள்ை.

"நான் வீதிக்கு வரக் கூடாதா அம்மா?"

"கூடாது.” - -

"அப்படியானல் 5ம் வீட்டு வாயிற்படியில் இருந்த படியே பார்க்கிறேனே!"

"அதுவும் கூடாது!” -

'கதவின் ஒரத்தில் கின்றபடியே கண்டு களிக்கக் கூடாதா?”

'கண்டு களிப்பது என்ன? நீ சிறு குழந்தையா, வேடிக்கை பார்க்க நான் கதவைச் சார்த்தித் தாழ் போட்டு விடப் போகிறேன். பவனிக் கூட்டம் வீதியை விட்டுப் போன பிறகுதான் கதவைத் திறக்கப் போகிறேன்.”

என்ன அம்மா சொல்கிரும் கொடுமையான பேச்

சாக இருக்கிறதே!” -

'கொடுமையல்லவடி, பெண்ணே! இது என் கடமை!"

"ஐயோ கடமையே!' என்ருள் கங்கை. அவளால் மேலே பேச முடியவில்லை. அவள் உயிர்த் தோழி அவள் அருகே இருந்தாள். - : .

அன்னை.அவளேக் கவனிக்கவில்லை; அவளிடம் பேச்சுக் கொடுத்தால் ஒருகால் தன் மனம் நெகிழ்ந்து விடுமோ என்ற அச்சம். கதவைத் தாழிட்டாள். அதனருகே ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/134&oldid=619749" இலிருந்து மீள்விக்கப்பட்டது