பக்கம்:முல்லை மணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன் உலா 129

ஏவலனேக் காவல் போட்டாள். தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்.

வெளியில் பவனி ஆரவாரம் மிகுதியாயிற்று. அரசன் இந்த வீதிக்கு வந்து விட்டான் என்று தெரிந்தது. வர வர ஒலிகள் மிகுதியாயின. இங்கே இந்த இள கங்கை துடித்தாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று புலம்பினுள். அவள் தோழி ஏதேதோ ஆறுதல் சொன்ள்ை. கணத்துக்குக் கணம் அந்த நங்கையின் சோகம் அதிகமாயிற்று. பேசினவள் இப்போது பேச முடியவில்லை; கண்ணேச் செருகியது மயக்கம், அவள் கிலையைக் கண்டபோது தோழிக்கு ஒன்றுமே தோன்ற வில்லை. அவள் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டதோ என்று அஞ்சிள்ை. 'இந்தப் பைத்தியக்கார அன்னே இவள் உடலைக் காவல் புரியலாம்; இவள் உயிருக்குக் காவல் போட முடியுமா?’ என்று எண்ணினுள். இனித் தாமதித்தால் அந்த இள கங்கையை உயிருடன் காண முடியாது என்பது தெளிவாயிற்று.

அவளே அப்படியே விட்டு விட்டு அன்னேயிடம் ஒடினுள். தன் தோழியின் உயிருக்கு மருந்து இன்ன தென்று அவளுக்குத் தெரியும். அதை உடனே செய்ய வேண்டுமென்று ஒடினள். தலையில் தீப் பிடித்துக் கொண்டால் உடனே அருகில் உள்ள தண்ணிரை ஊற்றி அவிக்க வேண்டியதுதானே? அந்தத் தண்ணிர் அழுக்கு என்ற ஆராய்ச்சிக்கு அப்போது இடம் எது? - -

ஒடினுள் தோழி. "ஆபத்து ஆபத்து உடனே கதவைத் திறந்து விடுங்கள்' என்று அன்னேயிடம் கத்தினள். * - - 'திறந்தால்தானே ஆபத்து' என்று அவள் கூவிள்ை. "அந்த ஆபத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது திறவுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பெண்

- - 9-بسgp., ue

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/135&oldid=619750" இலிருந்து மீள்விக்கப்பட்டது