பக்கம்:முல்லை மணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை

சிலப்பதிகாரத்தின் மூன்ருவது காண்டம் சேர நாட்டு நிகழ்ச்சிகளைக் கூறுவது. வஞ்சி மாநகரில் சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குத் திருக்கோயில் எடுத்த வரலாற்றை இக் காண்டம் தலைமைச் செய்தியாகக் கொண்டிருப்பதனால் இதற்கு வஞ்சிக் காண்டம் என்ற பெயர் அமைந்தது. இதில் குன்றக் குரவை முதல் வரந்தரு காதை இறுதியாக ஏழு காதைகள் இருக்கின்றன. பத்தினியாகித் தன் வீரத்தைப் புலப் படுத்திய கண்ணகியை மதுரைக் காண்டம் காட்டுகிறது. கோபம் மறைந்து வீரம் அடங்கி அருள் மீதுார்ந்த பத்தினித் தெய்வத்தை வஞ்சிக் காண்டம் காட்டுகிறது.

காண்டத்தின் தொடக்கமே வழி டா ட் டோடு தொடங்குகிறது. முருகனையும் அப்பால் கண்ணகியையும் மலேகாட்டுக் குறவர்கள் வழிபடும் செய்தியை, குன்றக் குரவை என்ற முதற்காதை சொல்லுகிறது. தெய்வ வர லாற்றுக் காண்டம் வழிபாட்டோடு தொடங்கி வரங் தருவ தோடு நிறைவேறுவது பொருத்தந்தானே? - இப்பகுதியில் உரைப் பாட்டு மடை என்ற முதற் பாட்டு 33 அடிகளில் முன்காண்டத்தோடு கதையைத் தொடர்புபடுத்திச் சொல்கிறது. பிறகு குரவைக் கூத்துக் குரிய பாடல்கள் வருகின்றன.

மலையிலே குருவிகளை ஒட்டியும் கிளிகளே ஒட்டியும் அருவியிலே ஆடியும் சுனேயிலே மூழ்கியும் இளைப்புற்ற குறமகளிர் நெடுவேள் குன்றத்தின் சாரலில் வந்து கொண் டிருந்தனர். அவர்கள் அம் மலையிலுள்ள வேங்கை மரத் தின் கிழலில் ஒற்றை கிலோடு நின்ற கண்ணகியைக் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/141&oldid=619756" இலிருந்து மீள்விக்கப்பட்டது