பக்கம்:முல்லை மணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 முல்லை மணம்

டனர். அவளேப் பார்த்தபோது அவர்கள் உள்ளத்தில் பக்தி பிறந்தது. தங்கள் குலத்தில் உதித்துத் தெய்வமாகிய வள்ளி நாச்சியாரைப் போலத் தோற்றியது. உடனே அவளே அணுகி, "வள்ளி போல்வீர், கண்டார் உள்ளம் நடுங்கும்படியாக ஒரு ங்கில் இழந்து வந்து கின்ற நீர் யார்?" என்று கேட்டனர்.

மதுரையை எரித்தபோது கனற் பிழம்பாக கின்ற கண்ணகி, இப்போது அந்தச் சினத்தின் சுவடே இன்றி, யாவும் ஊழ்வினையால் விளைந்தவை என்ற தெளிவோடு கின்ருள். ஆதலின் சிறிதும் முனிவை அடையாமல், "வலிய ஊழ்வினை வந்து கடிய விளைவை உண்டாக்கிய போது மணம் கிறைந்த மதுரையோடு அதன் அரசனும் கெட, கணவனே அங்ககளில் இழந்து இங்கே வந்த கடிய வினையை உடையேன்” என்று கூறினுள்.

அதைக் கேட்ட மலே வாழ் மகளிர் அவளே வணங்கி அச்சத்துடன் கைகளேக் கூப்பி கின்ருர்கள். அப்போது குன்றில் வாழ்பவ்ர் யாவரும் கண்டு கிற்க, வானவர் பூமாரி பெய்து கோவலனே அழைத்துச் செல்பவர், இவளேயும் அவ ளுேடு கொண்டு போயினர். யாவரும் வியப்படைந்து, 'இவள் கண்கண்ட தெய்வம். கம் குலத்துக்கு இவளைப் போலப் பெரிய தெய்வம் வேறு இல்லை. மலையிலுள்ள சிறு குடியில் உள்ளவர்களே, வேங்கை கிழற் கீழ் சின்ற, பத்தினித் தெய்வத்தைப் போற்றுங்கள். குறிஞ்சி கிலத் துக்குரிய தொண்டகப் பறையையும் சிறு பறையையும் முழக்குங்கள் கொம்பை ஊதுங்கள். மணியை அடியுங் கள். குறிஞ்சிப் பண்ணேப் பாடுங்கள். கறும்புகை புகை யுங்கள். பூவினல் அர்ச்சனே செய்யுங்கள். கோயில் அமை யுங்கள். புகழ்ந்து மலர் தாவுங்கள். இந்தப் பெருமலை வளஞ் சுரப்பதாக என்று இந்த கங்கைக்குப் பூசை நிகழ்த் துங்கள்" என்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/142&oldid=619757" இலிருந்து மீள்விக்கப்பட்டது