பக்கம்:முல்லை மணம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை - 137.

மகளிர் பாடிக் கொண்டே மலேயருவியில் ஆடினர்கள். அகத் துறையமைந்த பாடல்களைப் பாடினர். பிறகு முரு கனேப் பாடிக் குரவை யாடலாயினர். அப்படி ஆடுகையில் முருகனைப் பாராட்டி மூன்று பாடல்களைப் பாடுகிரு.ர்கள்.

முருகனுடைய வேலேப் பாராட்டும் பாடல்களாக அவை அமைகின்றன. முதற்பாட்டில் முருகன் எழுந்தருளி யிருக்கும் செங்தில், செங்கோடு, வெண்குன்றம், ஏரகம் என்ற தலங்களைச் சொல்லி, கடலில் மறைந்த குரளுகிய மாமரத்தை முருகன் வேல் அழித்தது என்று பாடுகின் றனா.

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேல்அன்றே, பார் இரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருநாள் சூர்மாத் தடிந்த சுடரிலேய வெள்வேலே ! அடுத்த பாட்டில் முருகனுடைய ஆறுமுகங்களையும் பன்னிரண்டு திருக் கைகளையும் பாடி, பிணிமுகம் என்னும் யானையின் மீது ஏறிச்சென்று வேலால் அவுனர்களே, இந்திரன் ஏத்தும்படியாகக் கொன்றதைப் பாடுகிருர்கள்.

அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும் இணையின்றித் தான் உடையான் ஏந்தியவே லன்றே,

பிணிமுகமேற் கொண்டவுனர் பீடழியும் வண்ணம்

மணிவிசும்பிற் கோன் ஏத்த மாறட்ட வெள்வேலே!

மூன்ருவது பாட்டில் முருகன் சரவணப் பொய். கையில் தாமரையே பள்ளிக் கட்டிலாகவும் அப்பொய் கையே பள்ளி யறையாகவும் கிடந்து, கிருத்திகை மாதர் அறுவருடைய பாலே உண்ட செய்தியும், குரனுடைய மார் பையும் கிரெளஞ்சாசுரளுகிய மலையையும் முருகன் வேல் அழித்த செய்தியும் வருகின்றன. . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/143&oldid=619758" இலிருந்து மீள்விக்கப்பட்டது