பக்கம்:முல்லை மணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை மணம் 1 f

கோசல நாட்டில் ஆடவர் கலேதெரி கழகங்கள் உள்ள கக் தன வனங்கள் அவர்களின் மேனி மணத்தால் முல்லைவனம் ஆகின்றன. அரிசில் கிழார் அறிமுகப்படுத்தும் தலைவியின் தோள், அவளுடைய காதலன் தழுவியதனுல் அவனுடைய மேனி மணமாகிய முல்லையின் நறுமணம் வீசுகிறது. குமர குருபரர் போற்றும் நடராசப் பெருமானுடைய திருமேனி உமாதேவியின் கண்ணுகிய மான் உலவுவதல்ை மட்டு மன்றி மணத்தாலும் மலர் முல்லைப் புறவமாக விளங்கு கிறது.

ஓர் அரிய கருத்தை, இது உண்மைதான் என்று தெரிந்துகொள்ள மூன்று பெரும் புலவர்கள் சான்று கூறினல் போதாதா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/17&oldid=619606" இலிருந்து மீள்விக்கப்பட்டது