பக்கம்:முல்லை மணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முல்லே மணம்

(தேன் குறுக்கிட்டு ஓடும் வாசனையையுடைய மாலையை அணிந்த, கருமணல்ே ஒத்த கூந்தலையும் கிருத்தமான அணிகலன் களையும் பெற்ற சிவகாமசுந்தரியின் கண்ணுகிய மான் குட்டிக்கு உன் கிருமேனி, முல்ல்ே மலரையுடைய வனமாகும். மறிக்கும் . குறுக்கிடும்; வெறி - மணம்; தொங்கல் - மாலை; அறல் - கரு மணல், இழை - ஆபரணம்; புறவம் - முல்லே மலர்.)

பிறகு இறைவன் திருமேனியைப் பூம்பொழில் என்கிருர், - - - .

பிறைஅளிக்கும் சிறுநுதல்அப்

பெண்அமுதின் பேரமர்க்கண் சிறைஅளிக்குன் திருமேனி

தேன் அளிக்கும் பொதும்பரே! (பிறையை ஒத்த சிறிய நெற்றியை உடைய அந்தப் பெண்ண முதத்தின் பெரிய மோதும் கண்ணுகிய சிறகையுடைய வண்டுக்கு உன் திருமேனி, தேனைத் தரும் சோலேயாகும். அளி வண்டு; பொதும்பர் - சோலே.) .

இந்த மூன்று உருவகங்களில் இரண்டாவது உருவகத் தில் முன்னே நாம் கண்ட கருத்து வந்திருக்கிறது. இன்ற வியின் கண்ணே மானுக உருவகம் செய்தவர், இறைவன் திருமேனியை முல்லை மலர் கிரம்பிய காடாகச் சொல்கிரு.ர். 'திருந்திழைகண் மான்மறிக்கு உன் திருமேனி மலர் முல்லைப் புறவமே!” என்கிருர், இங்கே மான் என்றதற்காக ஏதோ ஒரு வனத்தைச் சொன்னர் என்று எண்ணக் கூடாது. இறைவன் திருமேனி முல்லைமணம் வீசுவது; அதனல் அது முல்லைவனம் போலவே இருக்கிறது.

ஆடவர் மேனி முல்லே மணம் உடையது என்ற கருத்து வழிவழியே புலவர் உலகத்தில் இருந்து வருகிறது என்ப தனே மூன்று இடங்களில் கண்டோம். கம்பன் காட்டும்

1. சிதம்பரச் செய்யுட்கோவை, 57,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/16&oldid=619604" இலிருந்து மீள்விக்கப்பட்டது