பக்கம்:முல்லை மணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை மணம் 9

மின்செய்த சிறுமருங்குற்

பெருந்தேவி விழிகுளிர்ப்பப் பொன் செய்த மணிமன்றில்

நடஞ்செய்த புகழோய்! கேள். (மருங்குல் - இடை, பெருந்தேவி - சிவகாமசுந்தரி, குளிர்ப்பகுளிர்ச்சியடைய, மணிமன்று - அழகிய அம்பலம்.)

அம்மையின் கண் கயல் போலவும் மான் போலவும் வண்டு போலவும் இருக்கிறது. அந்தக் கண் இறைவன் அழகுத் திருமேனியிலே சுழன்று விளையாடுகிறது. அப் போது அவன் திருமேனி கயலுக்கு ஏற்ற கடலாகவும், மானுக்கு ஏற்ற முல்லைவனமாகவும், வண்டுக்கு ஏற்ற பூம் பொழிலாகவும் விளங்குகிறது.

"இறைவா, மணம் வீசும் மாலையை அணிந்த கூந்தலைப் பெற்ற பெருமாட்டியின் மையை உண்ட கண்ணுகிய இரட்டைக் கயல்மீன்களுக்கு உன் திருமேனி புதிய ர்ே வெள்ளத்தையுடைய கடலாக இருக்கிறது" என்று புகழ் கிருர் குமரகுருபர முனிவர். -

முருகுயிர்க்கும் நறுந்தெரியல் k மொய்குழலின் மையுண்கண்

பொருகயற்குன் திருமேனி

புதுவெள்ளப் புணரியே!

(முருகுமணம்; தெரியல் - மாலையை அணிந்த, பொரு கயல் - இரட்டைக் கயல்; புணரி கடல்.)

அடுத்தபடி, மானுக்கு ஏற்ற முல்லை வனம் என்கிருர்,

தேன்மறிக்கும் வெறித்தொங்கல்

அறற்கூந்தல் திருந்திழைகண் மான்மறிக்கு உன் திருமேனி மலர்முல்லைப் புறவமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/15&oldid=619602" இலிருந்து மீள்விக்கப்பட்டது