பக்கம்:முல்லை மணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. முல்லை மண்ம்.

மணந்தது உண்மை" என்று கூறியது. அன்று சார்ந்த மணம் இன்றும் மணந்தது. -

இதைத் தன் தோழியிடம் சொன்னாள் காதலி:

மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன இட்டுவாய்ச் சுனேய பகுவாய்த் தேரை தட்டைப் பறையில் கறங்கும் நாடன் தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின் மணந்தனன் மன்நெடுந் தோளே; இன்றும் முல்லே முகைநா றும்மே." (தொல்லே - பண்டு, மணந்தனன் - தழுவினன்; முகை - அரும்பு நாடன் கொல்லே நெடுவெண்ணிலவில் தோள் மணந்த னன்; இன்றும் முல்லேமுகை காறும்.)

"அன்று அவன் மணந்த என் தோளில் இன்றும் முல்லேயரும்பு மணக்கிறது” என்ற அவள் கூற்றிலே, 'ஆடவருடைய மேனி முல்லே மணம் உடையது” என்ற உண்மை பொதிந்திருக்கிறது. .

3

இந்த உண்மையைக் குமர குருபர சுவாமிகள் ஓரிடத்தில் புலப்படுத்துகிருர். சிதம்பரச் செய்யுட் கோவை என்னும் நூலில் வருவது அது. சிதம்பரத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான் புகழை விரிக்கும் பாடல் அது.

சிவகாம சுந்தரி அருகில் கின்று நடராசப் பெருமா லுடைய நடன அழகையும் திருமேனிப் பேரெழிலையும் பார்த்துப் பார்த்து இன்புறுகிருள். மின்னலைப் போன்ற இடையை யுடைய மாதேவியாகிய அப் பெருமாட்டி விழி குளிரும்படி பொன் மன்றத்தில் கடம்புரியும் கூத்தப் பெரு மான நோக்கி முனிவர் பாடுகிருர். .

1. குறுந்தொகை, 198.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/14&oldid=619600" இலிருந்து மீள்விக்கப்பட்டது