பக்கம்:முல்லை மணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லே மணம் 7.

(மட்டம் - கள், மணிக்கலம் - லே கிறக் கண்ணுடிக் குப்பிகள்; இட்டுவாய் - இடுகிய வாய், சுனேய சுனேயில் உள்ளனவாகிய; பகுவாய் - பிளந்தாற் போன்ற வாய்; தட்டைப் பறையின் - தட்டை என்னும் கிளிகடியும் கருவியைப் போல; கறங்கும் -

ஒலிக்கும்.) -

பல காலத்துக்குமுன் கடந்தது அது. முதல் முதல் காதலனேத் காதலி கண்டு இன்புற்ருள். அன்று கல்ல கிலா. நெடுநேரம் கிலா, தன் ஒளியை வீசியது. அவள் வாழ்க் கையிலும் அமுத நிலா ஒளி வீசத் தொடங்கிய காள் அல்லவா அது? அதை அவள் வாழ்வு முழுவதும் மறக்கா மல் கினேத்துக் கொண்டிருக்கிருள். நிலாவில் எல்லாப் பொருளும் ஒரு மோகனச் சோபையோடு விளங்கின. அவளுக்கும் புதுப் பொலிவு உண்டாயிற்று. நீண்டு பருத்த தோளே அவள் அவ்வளவு காலம் தாங்கியதற்கு அன்று பயன் கிடைத்தது. அந்த மலே நாடன், அவள் கெடுக்தோளே மனந்தனன். ஆ அந்த இன்பத்தை என்னென்று சொல் வது! அவன் தொட்ட தோளில் ஒரு புது இன்பம் ஒரு பூரிப்பு: ஒரு குளிர்ச்சி. அவனேக் காணுத நேரமெல்லாம், அவன் அணேந்த தோளேத் தொட்டுத்தொட்டுப் பார்த்து மகிழ்ச்சியை அடைந்தாள். அதில் குளிர்ச்சி மாத்திரமா இருந்தது. அதில் ஒரு புது மணம், ஆம், அது முல்லையரும் பின் மனம் வீசியது. அவள் முல்லை மாலையை அணிந்து கொண்டாளா? இல்லையே! அவன் அணைந்த தோள் அது. அவன் திருமேனி முல்லை மணம் வீசுவது. அவன் அணைந்த தோளில் அந்த மனம் சார்ந்து இப்போது மணந்தது. அந்த மணம் அல்லவா அவளேக் காப்பாற்றியது?

அவனைப் பிரிந்திருக்க நேர்ந்த சமயங்களில் எல்லாம் அவள், காம் 5ம் காதலனேச் சந்தித்தது கனவோ!' என்று ஐயுற்றதும் உண்டு. ஆனல், அவள் தோள் முல்லை யின் மணத்தை வீசி, 'இல்லை, இல்லை. அவன் உன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/13&oldid=619598" இலிருந்து மீள்விக்கப்பட்டது