பக்கம்:முல்லை மணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முல்லை மண்ம்

துள் தாங்கி ஆற்றி யிருந்தாயே! அது மிகவும் அரிய செயல்’ என்று பாராட்டினுள். - -

"நான் ஆற்றுவதற்குக் காரணம் என் மனவலிமை யென்ரு கூறுகிருய்? இல்லை இல்லை. என் காதலர் செய்த தண்ணளியே எனக்கு அந்த ஆற்றலைத் தந்தது. அவர் என்னிடம் வைத்திருக்கும் காதல், கினைக்கும் தோறும் இன்பம் தந்தது. அவர் எனக்குத் தந்த இன்பத்தை அவரைப் பிரிந்திருந்த போதெல்லாம் எண்ணி ஆறுதல் பெற்றேன்" என்ருள் காதலி. அவள் கூறுவதாகக் குறுக் தொகையில் ஒரு பாட்டு வருகிறது. அரிசில்கிழார் என்ற பெரும் புலவர் அதைப் பாடியிருக்கிரு.ர்.

அவளேக் காதலித்த மணவாளன் ஒரு காட்டுக்குத் தலைவன். சிறு சிறு குன்றங்களை உடைய நாடு அது. அந்தக் குன்றுகளில் சின்னச் சின்னச் சுனைகள் குழிவாக இருக்கும். கள்ளை ஊற்றி வைக்கும் கண்ணுடிக் குப்பி களைப் போலச் சிறிய வாயும் அகன்ற உள்ளிடமும் உடையவை அச் சுனைகள். அவற்றிற்குள்ளே தேரைகள் வாழும். மழைக் காலத்தில் அவை ஒவித்துக் கொண்டே இருக்கும். மலைப் பகுதிகளில் தினக் கொல்லியைக் காக்கும் பெண்கள் குருவியையும் கிளியையும் ஓட்டத் தட்டை என்னும் கருவியை வைத்திருப்பார்கள். மூங்கி லேத் துண்டாக்கி அங்தத் துண்டில் கைப்பிடி உள்ள இடத்தைத் தவிர மற்ற இடத்தில் பிளந்து, தட்டும்போது பிளந்த பகுதிகள் ஒன்ருேடொன்று மோதி ஒலிக்கும்படி செய்வது தட்டை அதைத் தட்டினல் எப்படி ஒலிக்குமோ அப்படி யிருக்கும் தேரையின் ஒவி. சுனேயில் பிளந்தாற். போன்ற வாயை உடைய தேரைகள் எப்போதும் ஒலிக்கும் காட்டுக்குத் தலைவன் அவளுடைய காதலன். - . ." - - மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன

இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை தட்டைப் பறையிற் கறங்கும் நாடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/12&oldid=619596" இலிருந்து மீள்விக்கப்பட்டது