பக்கம்:முல்லை மணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்கல மணம் む

காதலி கினேத்தபோது தனியே வர இயலாமற் போகும் சமயங்களில் அவர்களுடைய சந்திப்பு நிகழாது. அப்படியே தனக்குரிய கடமைகளே ஆற்றும் பொருட்டுக் காதலன் வரமுடியாமற் போகும் சமயங்களிலும் சந்திப்பு நேராது. சக்திக்க இயலாமல் இருந்த நாட்களிலெல்லாம் இருவரும் மிக்க துன்பத்தை அடைவார்கள். காதலளுவது பல கடமைகளேச் செய்து பொழுது போக்குபவனுதலால் அந்தத் துன்பத்தை மறக்கும் செவ்வி அவனுக்குக் கிடைத்தது. அந்த இளம் பெண்னே, அவன் வராமல் இருப்பதை எண்ணி எண்ணிப் புழுங்கிளுள்; அவனைப் பிரிந்திருக்கும் வாழ்வை வெறுத்தாள்; மனத்திலே எல்லே கடந்தவருத்தம் இருந்தாலும், அவள் அவ் வருத்தம் வெளியிலே தோன்ருதப்டி மறைத்தாள். - -

யாருக்கும் தெரியாமல் காதல் புரிந்த அவர்கள் பின்பு திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியர் ஆயினர். தம் காதலை உலகினருக்குத் தெரியாமல் மன்றக்க வேண்டிய அவசியம் இன்றி இப்போது நாடறியக் காதலையும் அறத் தையும் வளர்த்து வாழ்ந்தனர்.

காதலிக்கு ஒரு தோழி இருந்தாள். களவுக் காதல் செய்த காலத்தில் காதலி உள்ளுக்குள் வருத்தத்தால் குமைந்தாலும், தன் உணர்ச்சியை வெளியே தெரியாமல் அடக்கியதை அவள் உணர்ந்தவள். இப்போது காதலர் இருவரும் இணைபிரியாமல் ஒன்றி வாழ்வதையும், அவர்கள் காதல் உரமேறியிருப்பதையும் கண்டபோது, "இப்படி இருக்க வேண்டியவள் அப்போது தன் மனத் துயரை எப்படித்தான் அடக்கிேைளா மன ஆற்றல் உடையவள் இவள்!' என்று தோழி வியந்தாள்.

திருமணம் ஆனவுடனே அவர்கள் வீடு சென்று காத லியை நோக்கி, 'உடம்பு மெலிவுருமல், அழகு குலையாமல், பெண்மைக்குரிய புகழ் கெடாமல் உன் துயரத்தை மனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/11&oldid=619593" இலிருந்து மீள்விக்கப்பட்டது