பக்கம்:முல்லை மணம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முல்லே மனம்

விளையாடும் இடம் சந்தன மரக் காடாக இருந்தாலும், அம் மகளிருடைய திருமேனி வாசனையால் சண்பக வனத் தின் மணம் வீசும். ஆகையால், அவை சந்தனவனம் அல்ல; சண்பக வனங்களே' என்று எண்ணும்படி நேரும். அவ்வண்ணமே மைந்தர் கலே தெரியும் இடம் பன்மலர் மணம் வீசும் கந்தனவனமாக இருந்தாலும் அவர்கள் திரு மேனியில் முல்லையின் மணம் வீசுவதனல், பிற மணம் அடங்க முல்லை மனம் மீதுார்கிறது. அதனல், 'இது கந்தன வனம் அல்ல; முல்லை வனம் போலும்! என்று எண்ணத் தோன்றும். -

இவ்வாறு மகாவித்துவான் பிள்ளையவர்கள் உரை கூறுவார்களாம். 'சந்தனவனம் அல்ல; சண்பக வனமாம். கந்தனவனம் அல்ல, புறவமாம் என்று பொருள் கொள் வது அவர்கள் கருத்தென்று தெரிகிறது.

மகளிர் மேனியில் சண்பக மணம் வீசும் என்பதும், மைந்தர் மேனியில் முல்லை மணம் வீசும் என்பதும் ஆகிய நுட்பமான உண்மைகளே அடிப்படையாக வைத்து எழுந்த உரை இது. உத்தம மகளிர் மேனி இயற்கையான மணம் உடையது என்பதும், அது சண்பக மலர் மணம் உடைய தென்பதும் நூல்களில் கண்டவை.

ஆடவர் மேனி முல்கல மணம் உடையது என்பது அருமையான செய்தி. இதனேக் கம்பன் சொல்வதற்கு முன்பே பழைய தமிழ்ப் புலவர்கள் ஆண்டிருக்கிரு.ர்கள்; பின் வந்த புலவர்களும் சொல்லியது உண்டு. அவற்றை இனிப் பார்க்கலாம். -

2 ஒரு காதலன் ஓர் அழகிய மகளைக் காதலித்தான். புறத்தார் அறியாமல் அவர்கள் அன்பை வளர்த்தார்கள். காள்தோறும் அவர்கள் சந்திக்க முடியாமல் போகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/10&oldid=619591" இலிருந்து மீள்விக்கப்பட்டது