பக்கம்:முல்லை மணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை. மணம் 3.

கள். ஒன்று சங்தனமரச் சோலையிலே விளையாடுவார்கள்; அல்லது சண்பகப் பூம்பொழிலில் ஆடுவார்கள்.

கந்தனே அனேய காளேயர் கலைகளே ஆராய்ச்சி செய்யும் கழகங்கள் நந்தன வனங்களில் உள்ளன. இல்லையேல் மணம் விரியும் முல்லை வனங்களில் உள்ளன. பன்மலர்க் கொடியும் செடியும் கிரம்பிய நந்தனவனமும் முல்லே வன: முமே அவர்கள் கலே பயில இடங் கொடுக்கும் கல்லூரி கள். பிற இடங்கள் அல்ல. -

இளம் பருவ மகளிரும் மைந்தரும் அழகும் உடல் நலத்துக்கு ஏற்ற வளப்பமும் உடைய இடங்களில் விளை யாட்டும் கலையும் பயில்வதனால் உரம் பெறுகிருர்கள்; அழகு பெறுகிருர்கள்.

இப்படி விரிக்கும்படியாக இந்தப் பாட்டுக்குப் பொருள் செய்வது வழக்கம். 'இளையவர் பயிலிடம் சந்தன வனம்; அவை அல்லவை சண்பகவனம். கந்தனே அனேயவர் கலதெரி கழகம் நந்தனவனம் அல்லவை புறவம் என்று கூட்டிப் பொருள் கொண்டு விரிக்கும் உரை இது.

,害 இவ்வாறு அன்றி இதற்கு நுட்பமான வகையில் வேறு ஒர் உரையைத் தம் ஆசிரியராகிய திரிசிரபுரம் மகா வித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளேயவர்கள் சொன்ன தாக மகாமகோபத்தியாய டாக்டர் ஐயரவர்கள் ஓரிடத்தில் எழுதியிருக்கிரு.ர்கள். அந்த உரையைப் பார்க்கலாம்.

மகளிர் விளையாடும் இடங்கள் சந்தன வனங்கள்தாம்; ஆளுல் அருகில் சென்று பாராதவர்களுக்கு அவை சந்தன வனமாகப் புலப்படாமல் சண்பக வனமாகப் புலப்படு மாம். அப்படியே மைந்தர் கலேயை ஆராயும் இடம் கந்தன வனமாக இருந்தாலும், முல்லேக் காடாக எண்ணத் தோன்றுமாம். காரணம் என்ன தெரியுமா? மகளிருடைய மேனி சண்பக மலர் மணம் உடையது. பல மகளிர் சேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/9&oldid=619589" இலிருந்து மீள்விக்கப்பட்டது