பக்கம்:முல்லை மணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முல்லை மணம்

உள்ளத்துக்கும் உரம் ஏறுகிறது. இளமையும் அழகும் கிரம்பிய அவர்களைப் பார்த்தால், முருகன் பல உருவங்களே எடுத்து எழுந்தருளி யிருக்கிருனே' என்று தோன்றும். அவர்கள் திருமேனி அழகுடையவை; அவர்கள் பயிலும் கலேயும் அழகியது; அவர்கள் தங்கும் இடமோ சால அழகியது.

மகளிர் பந்தாடும் இடமும் மைந்தர் கலை பயில் இடமும் இன்னவை என்பதை ஒரு பாட்டில் கம்பன் சொல்கிருன். - -

பந்திகன இளையவர் பயில்இடம், மயில்.ஊர் கந்தனே அனையவர் கலேதெரி கழகம், சந்தன வனம், அல சண்பக வனமாம்; நந்தன வனம், அல நறைவிரி புறவம், !

'பந்து விளையாட்டை இளைய மங்கையர் பயிலும் இடங்கள் சந்தனவனம் அல சண்பக வனமாம்; கந்தனை அனேய மைந்தர் கலேதெரி கழகம் இருக்கும் இடங்கள் கந்தனவனம் அல கறைவிரி புறவம்' என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும்.

(இளையவர் . இளைய மகளிர் கழகம் கல்விச் சாலே; கறை விரி புறவம் . மணம் பரவுகிற முல்லைத் தோட்டம்.)

இளைய மங்கைமார் பக்தினே விளையாடும் இடங்கள் பெரும்பாலும் சக்தனவனங்கள்; அப்படி அல்லாதவை சண்பக வனங்கள்: அதாவது, அவர்கள் சந்தன வனத்தி லும் சண்பக வனத்திலும் பந்தாடி விளையாடுகிருர்கள். அவர்கள் கண்ட இடங்களில் விளையாடுவதில்லே; வீட்டுக் குள்ளே அடைந்து கிடப்பதும் இல்லே. மணம் வீசும் சூழ் Bஆலயில் தென்றல் மணக்கும் பொழிலில் விளையாடுகிருர்

1. கம்பராமாயணம், நாட்டுப். 48.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/8&oldid=619587" இலிருந்து மீள்விக்கப்பட்டது