பக்கம்:முல்லை மணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை மணம்

கோசல நாட்டைக் கம்பன் வருணிக்கிருன் இயற்கை அழகு கிரம்பிய அந்த காட்டு மகளிரும் மைந்தரும் அழகும் அறிவும் சான்றவர்கள். அவர்களுடைய பழக்க வழக்கங் களே காட்டுப் படலம் சொல்கின்றது. இளைய பெண்கள், இன்னும் மணம் ஆகாதவர்கள், மான்குட்டிகளைப் போலத் துள்ளி விளையாடுகிருர்கள்; பலர் சேர்ந்துகொண்டு விளே யாடுகிரு.ர்கள். -

மலர் கிரம்பிய பொழில்களும் மணம் நிரம்பிய தோட் டங்களும் அவர்கள் விளையாடும் இடங்கள். நல்ல காற்று மனத்தை அள்ளி வீச, திறந்த வெளியிலே பந்தாடுகிருர் கள். அக் காலத்தில் பந்தாடுதல் மகளிருக்கே உரிய விளை யாட்டாக இருந்தது. சந்தன மரங்களை ஒரக்காவில் வைத்து வளர்த்திருக்கிருர்கள். அத்தகைய இடத்தில் பங் தாட்டம் கடைபெறுகிறது. மகளிர் பக்தாடும் இடமாக விளங்குகிறது சக்தன வனம். . . . -

இகளஞர்கள், இன்னும் மணம் ஆகாத கட்டிளங் காளையர், பல கலைகளையும் பயில்கிருர்கள். மணமும் அழகும் கிரம்பிய நந்தனவனங்களில் அவர்கள் பயிற்சி பெறுகிருர்கள். கல்லாலும் மண்ணுலும் எடுத்த மாளிகை களில் அல்ல; கொடியும் செடியும் மலரைத் தாங்கி நிற்கும் நந்தன வனங்களினிடையே சாலைகள் அமைந்திருக் கின்றன. . . . . அந்தச் சாலைகளில் அவர்கள் இருந்து கலை பயில் கிருர்கள். நல்ல காற்று வீசும் குழலிலே உடம்புக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/7&oldid=619585" இலிருந்து மீள்விக்கப்பட்டது