பக்கம்:முல்லை மணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கரும்பு 芷

இந்த இரண்டு பேருக்கும் உபமானமாகக் கரும்பு வருகிறது. - . . .

ஒருவன் கரும்புத் தோட்டம் போட்டான். கரும்பு கன்ருக முற்றி விளக்தது. அதை வெட்டி ஆலையிட்டு வெல்லமாக்கிவிட்டான். கரும்புத் தோட்டத்தில் செத்தை யும் சக்கையும் குவிந்து கிடந்தன. அவற்றிற்கு யாரோ ஒரு போக்கிரி தீ வைத்துவிட்டான். அதைக் கண்ட ஒருவர் ஓடிவந்து தோட்டத்துக்குச் சொந்தக்காரரிடம். "ஐயா, உங்கள் கருப்பங்காடு எரிகிறது' என்று சொன்னர். அவர் என்ன சொன்னர் தெரியுமா? நானே தீவைக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்தப் புண்ணியத்தை யாரோ உபகாரி கட்டிக் கொண்டான். அவன் வாழட்டும். ஆலயாட்டி வெல்லம் எடுத்த பிறகு கருப்பங்காடு எரிங் தால் என்ன? எரியாமல் இருந்தால் என்ன?" என்ருர்.

இன்னும் ஆலயிடாமல், கரும்பை வெட்டாமல் இருந்த மற்ருெருவன் வயலில் ஒருவன் தி வைத்துவிட்டான். அப் போது, "ஐயோ! பட்ட பாடெல்லாம் வீணகிப் போய்விட் டதே!” என்று கிலத்துச் சொந்தக்காரன் அலறிஞன்.

இந்த இரண்டு பேரில் கரும்பை ஆலேபோட்டு ஆட்டிக் கொண்டவனைப் போன்றவன் ஞானி; மற்ருெருவனுக்குச் சமமானவன் அஞ்ஞானி.

'கரும்பினல் கட்டி கொண்டவர் அதன் துரும்பாகிய தோகை வேகும்பொழுது துயரடைய மாட்டார். அது போல முயற்சி செய்து இவ்வுடம்பினல் உண்டாகும் நல்ல பயனேப் பெற்றவர் யமன் வரும்பொழுது வருந்தமாட்டார் க்ள்' என்று காலடியார் சொல்கிறது.

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலேக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயர்ஆண்டு உழவார்; வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். -

1. நாலடியார், 35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/21&oldid=619615" இலிருந்து மீள்விக்கப்பட்டது