பக்கம்:முல்லை மணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முல்க் மணம்

(கட்டி - கற்கண்டு; சிறுகால்ே - தக்க பருவத்தில், துரும்பு - செத்தை; வருக்கி - முயற்சி செய்து கூற்றம் - யமன், பரிவது - இாங்குவது.) -

கரும்பின் துனியில் இருக்கும் தள்ழையைத் தோகை என்று சொல்வார்கள்: அதைக் கொழுத்தாடையென்று உலக வழக்கில் வழங்குவார்கள். கரும்பின் துணிப்பகுதி சுவையற்றது; அடிப்பகுதி மிக்க சுவையுள்ளது.

'அஜகஜாக்தரம் என்று ஒரு பழமொழியை நாம் பல முறை கேட்டிருக்கிருேம்.உயர்வும் தாழ்வும் உள்ள இரண்டு பொருள்களினிடையே உள்ள வேற்றுமையைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்குகிறது. அஜம் என்பது ஆடு: கஜம் என்பது யானே. ஆட்டுக்கும் ஆனேக்கும் உள்ள வேறு பாடு என்பது அதன் பொருள். மலேக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்று சொல்வதில்லையா? அது போன்றது. இது. ஆடு சிறிய உருவமுடையது. ஆனே பெரிய உருவம் உடை யது. உருவத்தில் உள்ள வேற்றுமையைக் கருதிச் சொல்வது இது என்று தோன்றும். அதைவிட நுட்பமான கருத்து ஒன்று இருக்கிறது; கரும்போடு தொடர்புடையது அது.

தோகையோடு உள்ள கட்டுக் கரும்பை ஓரிடத்தில் போட்டிருக்கிருர்கள். அங்கே ஒரே சமயத்தில் ஓர் ஆடும் ஒர் ஆனேயும் வருகின்றன, ஆடு நேரே தோகையுள்ள பக்கத்துக்குப் போய்க் கொழுத்தாடையைக் கடிக்கும். ஆனேயோ கரும்பின் அடிப் பக்கம் சென்று கரும்பைக் கடிக்கும். சுவை காணும் திறத்தில் இப்படி ஆட்டைப் போன்ற மனிதர்களும் ஆனயைப் போன்ற மனிதர்களும் உலகத்தில் இருக்கிருர்கள் அல்லவா? அவர்களிடையே உள்ள வேற்றுமை அஜகஜாந்தரம்.

கரும்பை ஒருவன் துனியிலிருந்து கடித்துக்கொண்டு

வருகிருன். வரவர இனிமை மிகுதியாக இருக்கும். ஆனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/22&oldid=619617" இலிருந்து மீள்விக்கப்பட்டது