பக்கம்:முல்லை மணம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கரும்பு 17.

அடியிலிருந்து தின்று வந்தாைைல் முதலில் மிக இனிக்கும்; வரவர அந்த இனிமை குறையும் ; கடைசியில் சுவையே இன்றிச் சப்பிட்டுவிடும்.

கரும்பைக் கடித்துச் சுவைப்பதில் இப்படி இருவேறு வகை இருப்பதை ஒரு புலவர் கினேந்தார். நல்லவர்களோடு பழகினல் வரவர அவர்களுடைய கட்பு மேலும்மேலும் இனிமையைத் தருவதும், அல்லாதவர்களுடைய நட்பு வர வர நலம் குறைந்து அருவருப்பில் வந்து முடிவதும் அவ ருக்கு உடனே நினைவுக்கு வந்தன. இரண்டையும் உவமை யாக்கி ஒரு பாட்டுப் பாடிவிட்டார். -

கனேகடல் தண் சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை

நுனியிற் கரும்புதின் றற்றே:-நுனிநீக்கித்

தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா

ஈரம் இலாளர் தொடர்பு.'

(ஒலிக்கின்ற கடற்கரைக்குத் தல்ேவனே, கற்று அறிந்தவர் களின் நட்பு, கரும்பை துனியிலிருந்து கின்ரும் போன்றது; துனியை விட்டு அடிப் பகுதியிலிருந்து கின்றற் போன்ற தன்மையை உடை யது, குணமும் அன்பும் இல்லாதவர்களுடைய நட்பு.]

★ -

கரும்பிலே நமக்கு வேண்டாதது கணு. அதைப் பற்றி ஒரு புலவர் பாடுகிருர். அவர் வேலேயர் என்னும் பெயருடையவர். சிவப்பிரகாச சுவாமிகள் என்ற பெருங் கவிஞருடைய தம்பி அவர் அவருக்குக் கருணேப்பிரகாசர் என்ற தம்பி ஒருவர் இருந்தார். மூவருமே புலவர்கள்; நூல்களே இயற்றியிருக்கிருர்கள். - . -

கடைசித் தம்பியாகிய கருணைப்பிரகாசர் முதலில் இறந்துபோனர். மூத்தவராகிய சிவப்பிரகாசர் பல ஆண்டு களுக்குப் பின் மறைந்தார். கடைசியில் பூத உடம்பை நீத்தவர் வேலேயர். தம் முன்னவரும் பின்னவரும் இறந்த

1. நாலடியார், 138.

மு. ம.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/23&oldid=619619" இலிருந்து மீள்விக்கப்பட்டது