பக்கம்:முல்லை மணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கரும்பு 19

ஒரு சபையில் என் ஆசிரியராகிய ஐயரவர்கள் தலைமை வகித்தார்கள். அப்போது மூன்று பேர் சொற்பொழிவு ஆற்றினர்கள். அவர்களில் நடுவிலே பேசினவர் அவை யடக்கமாக, "நான் முன் பேசிய நல்ல பேச்சாளருக்கும் பின் பேசப்போகிற அறிவாளிக்கும் இடையிலே வந்து விற்கிறேன், கரும்பிலே கணுவைப்போல்' என்ருர் அவ ருக்கு வேலேயர் பாடல் கினேவில் வந்திருக்கவேணடும். அவர் கன்ருகவே பேசினர். பேச்சு முடிந்தபிறகு அவைத் தலைவராகிய ஐயரவர்கள் தம் கருத்தைச் சொல்லும்போது, கணுவென்று அவர் சொன்னதற்கு உயர்வான பொருள் ஒன்றைச் சொல்லி யாவரையும் இன்புறச் செய்தார்கள். "அன்பர் தம்மைக் கணுவென்று சொன்னர். கணு வானது தாழ்ந்ததென்ற கருத்தில் அவர் சொல்லி யிருக்கலாம். ஆளுல் வேளாண்மை செய்பவர்களைக் கேட்டால் உண்மை விளங்கும்; கணுவின் பெருமை தெரிய வரும். கரும்பைக் காப்பாற்றி வளரவைப்பது கணுத்தான். கரும்புக் கரனேகளே கடும்போது முளே கிளம்புவது கணுவி லிருந்துதான். ஆகவே, கணுவும் உயர்ந்ததுதான்” என்று அவர்கள் சொன்னர்கள்.

கரும்பைப்பற்றி, இலக்கியங்களில் வரும் கரும்பைப் பற்றித்தான், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்போதைக்கு இது போதுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/25&oldid=619623" இலிருந்து மீள்விக்கப்பட்டது