பக்கம்:முல்லை மணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமனுக்குச் சாபம்

"இந்தப் படுபாவியால்தான் நான் இந்த அல்லலுக்கு ஆளானேன்" என்று நாம் படும் துன்பங்களுக்குப் பிறரைக் காரணமாக்கி, வெறுத்து, வைது சினத்தைக் காட்டுகிருேம். இதனுல் வீணே மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே கசப்பு வளர்கிறது. சமுதாய வாழ்வில் அமைதி கெடு கிறது. இதை மாற்றுவதற்காகவே, எல்லாம் விதியின் விளைவு' என்ற சமாதானத்தைப் பெரியவர்கள் வற்புறுத் திப் பேசுகிருர்கள். நல்லவர்கள் தாம் துன்புறும்போது, யாரையும் கொந்துகொள்ளாமல், எல்லாம் என் தலைவிதி' என்று சொல்லுகிருர்கள். .

விதி யென்றும், தலே எழுத்தென்றும் சொல்விச் சமா தானம் செய்துகொள்வதற்கு ஏற்ற வகையில் பல கற்பனை களைப் பெரியவர்கள் செய்து வைத்திருக்கிருர்கள். அவன் அவன் விதிப்படியே அயன் அவன் அவன் தலையில் எழுது கிருன் என்ருர்கள். உலகத்தைப் படைக்கும் கடவுள் பிரமன் என்றும், அவன் ஒவ்வோர் உயிரையும் படைத்து விடும்போது, அதன் அதன் புண்ணிய பாவங்களுக்கு ஏற்ற படி இன்ப துன்பங்களே வரையறுத்துத் தலையில் எழுதி விடுகிருன் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

தாம் துன்பப்படும்போது தம் தலைவிதியை கோவாமல் அயலாரை கோவதுபோல, எல்லாம் அந்தப் பிரமன் எழுதி யது' என்று கூறுவது அறிவுடையவர்களுக்கு வழக்கம். புலவர்கள் அவ்வாறு பிரமனுக்குச் சாபம் கொடுப்பதுண்டு.

. . . - - ★

நப்பாலத்தனர் என்ற புலவர் காதற் பாட்டு ஒன்று பாடியிருக்கிருர். ஒரு காதலன் தன் காதலியோடு இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/26&oldid=619626" இலிருந்து மீள்விக்கப்பட்டது