பக்கம்:முல்லை மணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமனுக்குச் சாபம் - 31

புற்று வாழும்போது தன் கடமைகளே ஆற்றுவதற்குப் போதிய பொருள் இல்லையென்று உணருகிருன். அதை ஈட்டிக்கொண்டு வராவிட்டால் இல்லற வாழ்க்கையை கடத்த இயலாது. அறம் செய்வதற்கும் இன்பவாழ்வு வாழ்வ தற்கும் பொருள் இன்றியமையாதது. பொருளேத் தேட வேண்டுமானல் அவன் வெளியூர் சென்று முயற்சி செய்ய வேண்டும். சில காலம் தங்கித் தொழிலோ வியாபாரமோ செய்தால்தான் பொருள் கிடைக்கும்.

ஒரு கணமும் காதலியைப் பிரியாது வாழ்கிற அவ னுக்கு, அவளேப் பிரியவேண்டுமே என்ற கினைவு துன் பத்தை உண்டாக்குகின்றது. அறம் செய்ய வேண்டுமானல் ஆடவன் முயற்சி செய்து பொருள் ஈட்டவேண்டும். இல்லே யானுல் உலகம் அவனேப் பழிக்கும். இந்த உண்மையையும் அவன் மறக்கவில்லை. தன் காதலியோடு முயங்கி இன்புறும் கிலே ஒருபாலும், பொருள் தேடுவதற்காக மேற்கொள்ளும் பிரிவு ஒருபாலும் இருந்து, அவன் சிக்தையைச் சிதறச் செய்கின்றன. மனம் ஊசலாடுகிறது. இன்பமா? கடமையா? என்ற கேள்வி அவன் அகக்கண்முன் கின்று பயமுறுத்துகிறது. இறுதியில் கடமையைச் செய்யத் துணிந்துவிடுகிருன். ஆனாலும், தான் இடையீடு இல்லா மல் நுகரும் இன்ப வாழ்வுக்கு இடையே இந்தப் பிரிவு நேரப்போவது அவனுக்கு மயக்கத்தை உண்டாக்கு கிறது. - -

"ஏன் இப்படித் தடுமாறுகிருய்' என்று அவன் மனம் கேட்கிறது. -

தடுமாற்றமா? நான் மலபோலத் திடமாக இருக் கிறேனே!' என்று அவன் அறிவு பேசுகிறது. -

'இந்தப் பயணத்தால் காதலியோடு ஒன்றி வாழும் வாழ்வு தடைப்படுமே. பாலே நிலத்தைக் கடந்து செல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/27&oldid=619628" இலிருந்து மீள்விக்கப்பட்டது