பக்கம்:முல்லை மணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 முல்லை மணம்

நேருமே! அது எவ்வளவு கடுமையான வழி தெரியுமா?"இப்படி ஒரு சிந்தன.

"ஒ. கன்ருகத் தெரியும். எங்கே பார்த்தாலும் சுடுகிற சரளைக் கற்கள். இடையே ஆயர்கள் தோண்டிய சிறிய பள்ளத்தில் தேங்கிய ைேர யானைகள் குடிக்கும் , அவ் வளவு ஈரமற்ற கிலம். அது என் இன்ப வாழ்வுக்கு இடையே வரும் தன்மையுடையதாக இருந்தாலும் கான் சென்று வரத் தீர்மானித்துவிட்டேன். திண்ணிய மலே போல இருக்கிறேன்" என்று சமாதானம் செய்துகொள் கிருன். ஆனாலும், உள்ளே பிரிவுத் துன்பம் பயமுறுத்து கிறது; சற்றே பொருமுகிருன் ; பெருமூச்சு விடுகிருன். 'இன்ப வாழ்விற்குப் பொருள் தேடும் முயற்சி பகையாக இருக்கிறதே! என்று எண்ணுகிருன். இந்த உலகத்தின் அமைப்பே அவனுக்குத் தொல்லையாகத் தோன்றுகிறது. 'என்னடா உலகம்' என்று எண்ணுகிருன். அப்பால், 'இப்படியெல்லாம் உலகத்தை அமைத்தானே, அவனே யல்லவா சொல்லவேண்டும்?' என்ற நினைப்புத் தோன்று கிறது. மனத்துக்குள் ஆத்திரம். பேச்சோ சாந்தமாகப் பேசுவதுபோல வருகிறது. 'இப்படியெல்லாம் கடக்கும் படி இந்த உலகத்தைப் படைத்தவன் நெடுநாள் சுகமாக வாழட்டும்! அவன் ஆட்சி நடக்கட்டும்” என்று வாழ்த்து கிருன். வாழ்த்தா இது வயிற்றெரிச்சவின் வேறு வடிவம்! -

ஐதே கம்மஇவ் வுலகுபடைத் தோனே! வைஏர் வால்எயிற்று ஒண்ணுதற் குறுமகள் கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி ஏங்குயிர்ப் பட்ட வீங்குமுலை யாகத் துயில்இடைப்படுஉம் தன்மைய தாயினும் வெயில்வெய் துற்ற பரல்அவல் ஒதுக்கிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/28&oldid=619630" இலிருந்து மீள்விக்கப்பட்டது