பக்கம்:முல்லை மணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமனுக்குச் சாபம் 35

பக்குடுக்கை கன்கணியார் என்பவர் ஒரு புலவர். அவர் ஒர் ஊருக்குப் போனர். ஒரு தெருவில் சாப்பறை கொட்டிக் கொண்டிருந்தது. அங்கே ஒரு வீட்டில் ஒர் ஆடவன் இறந்துவிட்டான். அதல்ை ஒரு பெண் மங்கலம் இழந்தாள். அந்த வீட்டில் ஒரே துயரம். அந்த வழியாகப் போன புலவர் சற்றே கின்று விசாரித்தார். செய்தியைச் சொன்னவர் சொல்லும்போதே கண்ணேத் துடைத்துக் கொண்டார். வீட்டுக்குள்ளே கண்ணிராறு ஓடியது. புலவர் அங்கிருந்து அடுத்த தெருவுக்குப் போனர். அங்கே கொட்டு மேளம் முழங்கியது. ஏதோ ஒரு வீட்டில் கல்யாணம். ஒரு கட்டிளங் காளை மங்கை யொருத்தியைக் கைப்பிடிக்கும் இன்ப விழா நடைபெற்றது. எங்கும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். எல்லோருடைய முகங்களிலும் பொலிவு, கண்

களில் ஒளி. இந்தக் காட்சியையும் அவர் கண்டார்.

இழவு நிகழ்ச்சியும் விழவு சிகழ்ச்சியும் ஒரே ஊரில் வெவ்வேறு வீட்டில் கடந்தன. ஒன்றில் சாப்பறை; மற்ருென்றில் சுகமான மத்தள சத்தம். ஒன்றில் கண்ணும் கண்ணிருமாகப் பெண்மணி கின்ருள்; ஒன்றில் தலே கிறையப் பூவும், கழுத்து கிறைய மாலையும் தாங்கி கின்ருள், ஒரு மங்கை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார். பின்னலே கண்ட காட்சியிலே இன்பம்; முன்னலே கண்டதில் துன்பம். இன்பம் முந்தி சின்ருலும் துன்பம் எப்படியும் வரத்தான் போகிறது. இப்படி ஒரே ஊரில் ஓரிடத்தில் மகிழ்ச்சியும், மற்ருேளிடத்தில் துயரமும் உண்டாகும்படி படைத்தானே அவன் பண்பிலி' என்று புலவருக்குத் தோன்றியது. அப்பா! இந்த உலகம் முடிவில் துன்பத்தைத் தருவதுதான். இதன் இயல்பை உணர்ந்த அறிஞர்கள் எப்போதும் இன்பத்தைத் தரும் இனிய செய்கைகளைச் செய்யட்டும் என்று சொல்விப் பெருமூச்சு விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/31&oldid=619636" இலிருந்து மீள்விக்கப்பட்டது