பக்கம்:முல்லை மணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முல்லை மணம்'

கிறேன். உருகும் அடியார்களுக்கு உறுதுணையாக கிற்கிறவன் நீ என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிருர்கள். அது தெரிந்தும் என் மனம் உருகாமல் கல்லேப்போல இருக்கிறதே! கல்கூட இசைக்கு உருகுமென்று சொல் கிருர்கள். அதைவிட இழிந்ததாக இருக்கிறதே என் மனம்' என்று அவர் முறையிடுகிருர்,

கல்லேனும் ஐயஒரு காலத்தில்

உருகும்என் கல்நெஞ்சம் உருகவிலேயே!

'ஏன் இந்த நெஞ்சம் உருகவில்லை? மனத்துக்கு இத்தனே வன்மை உண்டானது எப்படி? என்னைப் படைத் தவன்தானே இந்த மனத்தைப் படைத்து, இதற்கு இந்த வன்மையையும் படைத்திருக்கிருன்? அவனைப் பிரமன் என்றும் மூன்று கடவுளரில் ஒருவன் என்றும் சொல்கிருர் கள். கடவுளானுல் நல்ல காரியம் அல்லவா செய்ய வேண்டும்? இத்தகைய வன்மையைக் கற்பித்த அவனேக் கடவுள் என்று சொல்லலாமா? என்று அவர் எண்ணங்கள் விரிகின்றன.

கல்லேனும் ஐயஒரு காலத்தில்

உருகும்என் கல்நெஞ்சம் உருகவிலேயே! கருனேக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒருகடவுளோ? என்று பாடுகிருர். யார் மீதாவது நமக்குக் கோபம் வந்தால், "அவனும் ஒரு மனிதன?' என்று சொல்கிருேம்: அந்த வகையில்தான் தாயுமானவர், 'அந்த நான்முகனும் ஒரு கடவுளோ?' என்று கேட்கிரு.ர். -

பிறருடைய துன்பத்தைக் காணும்போது மனம் இரங்கும் அருளுடையாரும் இப்படிப் பிரமனே வைதி

ருப்பதை இலக்கியங்களில் காணுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/30&oldid=619634" இலிருந்து மீள்விக்கப்பட்டது