பக்கம்:முல்லை மணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முல்லே மணம்

மடமகள் முகம் சுருங்கிக் கண்ணிர் வார உள்ளே போய் விட்டாள். -

அழகும் இளமையும் மென்மையும் கொண்ட அந்த கங்கைக்கு அந்த முரடன் கணவன் என்பதைப் பாட்டி தெரிந்துகொண்டாள். அவளுக்கு இந்த மிருகத்தை எப்படிக் கட்டி வைத்தார்கள்?' என்று கினைத்தாள். பிறகு, 'மனிதர் கையில் என்ன இருக்கிறது? பாவம்! அந்த ஏழை கள் இப்படியெல்லாம் நடக்கப் போகிறதென்று கண்டார் களா? எல்லாம் பிரமன் எழுதிய எழுத்து. இவளுக்கு இவன் என்று அவன் அல்லவா முடி போட்டிருக்கிருன்? என்ற எண்ணம் வந்ததோ இல்லையோ, பாட்டிக்கு அந்தப் பிரமன் மேலே கோபம் வந்துவிட்டது. மான் போன்ற இந்த மெல்லியலுக்கு ஈரமில்லாத கட்டை போன்ற இவனைக் கனவளுக விதித்தானே, அந்தப் பிரமனே கான் கண்டால் என்ன செய்வேன் தெரியுமா? முன்பு அவனுக்கு ஐந்துதலே இருந்தனவென்றும், அகங்காரங்கொண்டு கின்ற தால் அந்த ஐந்தில் ஒன்றைச் சிவபெருமான் கொய்தான் என்றும், அதுமுதல் அவன் கான்முகன் ஆளுன் என்றும் சொல்லுகிருர்கள். இப்போது நான் அவனேக் கண்டால் எஞ்சியிருக்கும் நான்கு தலைகளேயும் ஒரேயடியாகக் கிள்ளி விட மாட்டேன” என்று பாட்டுப் பாடினுள் பாட்டி.

அற்றதலே போக அருததலே நான்கினையும் பற்றித் திருகிப் பறியேளுே?-வற்றல் மரம் அனேயா னுக்கிந்த மானேவகுத் திட்ட பிரமனேயான் காணப் பெறின். . . "பற்றித் திருகிப் பறியேனே?" என்ற அடியைப் படிக்கும்போது பாட்டி பல்லக் கடித்துக்கொண்டுதான் அதைச் சொல்லியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

பாவம் பிரமனே நினைத்தால் இரக்கந்தான் உண்டாகிறது. . - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/34&oldid=619643" இலிருந்து மீள்விக்கப்பட்டது