பக்கம்:முல்லை மணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அர ங் கு

எந்த நாடகம் ஆடினலும் தலைமைப் பாத்திரமாக வந்து நடித்துப் புகழ் பெறுகிற ஆற்றலுடைய கலைஞர்களே நாம் பார்த்திருக்கிருேம். அரசனேத் தலைமையாக உடைய கதை ஒன்று நாடகமாக கடிக்கப்பெறுகிறது. அப்போது அத்தகைய கலைஞர் அரசனுக்குரிய முடியோடும் அணியோ டும் சிங்காதனத்தில் வீற்றிருந்து மிடுக்காகப் பேசுவார். நடை, உடை, பாவனேகளில் அரசனுக்குரிய பெருமிதம் விளங்கும். வேறு ஒரு நாடகத்தில் திருடன் தலைமைப் பாத்திரமாக இருக்கிருன். அதில் அந்தக் கலைஞர் திருட ஆணுடைய கோலத்தைப் புனேந்து கொள்கிருர், அரச விழி விழித்த அந்தக் கலைஞரே இப்போது திருட்டு விழி விழிக்கிருர் ; பேச்சும் நடிப்பும் திருடனேப் போலவே இருக்கின்றன.

அடுத்தபடி துறவியைப் பற்றிய கதையில் அந்தக் கலைஞர் அதே கோலம் பூணுகிருர். அரசனுகவும் திருட கைவும் ஆட்சிபுரிந்தும் திருடியும் தம் கோலத்துக்கு ஏற்ப நடித்த அவர் இப்போது பற்றற்ற துறவியாக எளிமையே உருவாக கிற்கிருர். ஆசையை அறவே துறந்து எப்போதும் ஞானத்தையே பேசுகிருர், அரசனுக்கும் திருடனுக்குமா வது உடைமையை விரிவாக்கும் ஆசை பொதுவாக இருக் கிறது. துறவிக்கும் திருடனுக்கும் பொதுமை யாதும் இல்லை. ஆயினும் திருடனக உருக்காட்டி உரையாடிய அவரே துறவியாகவும் கோலம் கொண்டு உரையாடுகிரு.ர்.

இத்தகைய பெருங்கலேயாற்றலே அறிந்த மக்கள் அக் கலைஞரைப் பாராட்டுகிருர்கள் ; ஒவ்வொரு நாளும் வெவ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/35&oldid=619645" இலிருந்து மீள்விக்கப்பட்டது