பக்கம்:முல்லை மணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 முஸ்லே மணம்

வேறு கோலம் புனைந்து அந்த அந்தக் கோலத்துக்கு ஏற்பத் திறம்பட நடிக்கும் இயல்பைப் புகழ்கிருர்கள். நுட்ப மாகக் காண இயலாதவர்கள், ஒருவரே இத்தனை வகையான கோலமும் புனேகிருர் என்று தெரிந்துகொள்வதில்லை. ஆனல் கலே நுட்பம் தெரிந்தவர்களுக்கு உண்மை தெரியும். கூத்தில் மாறி மாறிக் கோலம் புனைந்து ாடிக்கும் திறமை கலைஞர்பால் இருக்கிறது. அது அவர் பலகால மாகப் பயின்று பெற்ற திறமை. ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் இத்தகைய ஆற்றலைப் பெற்றிருக்கிருன் நாடகக் கலைஞனேவிடத் திறம்பட கடிக்கிருன் நடிப்பதாகக் கூடக் கருதாமல் தான் மேற்கொண்ட பாத்திரமாகவே ஒன்றிப்போய் வாழ்கிருன் !

இது முதலில் வியப்பாகத் தோன்றலாம். உண்மையை உணரும்போது அந்த வியப்பு மறையும். காடகக் கலைஞன் இயற்கையாக ஒரு பெயரும் வாழ்க்கை முறையையும் உடையவன். ஆளுல் அவன் கொள்ளும் கோலமோ வெவ் வேருக மாறுகிறது. சில சமயங்களில் அவன் இயல்புக்கு நேர் மாருகக்கூட இருக்கலாம். கல்ல கெட்டிக்காரத் திருடஞகவும் கொலேயாளியாகவும் நடிப்பவர், வாழ்க்கை யில் அப்படி இருப்பார் என்று சொல்ல முடியாது. மணந்து மக்களப் பெற்று வாழ்வில் ஈடுபட்டவர் மேடை யில் பிரமசாரியாக இருந்தே துறந்த ஞானியாகக் கோலம் கொள்ளலாம். ஆயினும் அவருடைய இயற்கையான பண்பும் கிலேயும் எப்போதும் ஒரே நிலையில் இருக்கும்.

மனிதன் எவ்வாறு நாடகம் ஆடுகிருன் என்பதைப் பார்க்கலாம். கோலம் புனேயும் கலைஞர் கூத்து முடிந்த வுடன் தாம் மேற்கொண்ட ஆடையணிகளைக் கழற்றி விடு கிருர்கள். தமக்கே இயல்பான ஆடையை அணிகிருர்கள். மனிதன் என்று நாம் சுட்டும் பொருள் உடம்போடு கூடிய உயிராகும். மனிதன், விலங்கு என்று வேறு வேறு உருவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/36&oldid=619647" இலிருந்து மீள்விக்கப்பட்டது