பக்கம்:முல்லை மணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கு

திலே தோன்றுவன உடம்புகளே யன்றி, உயிர் அல்ல. காடகக் கலைஞன் உடையையும் அணியையும் புனேந்து கொள்வதுபோல, உயிர் உடம்பாகிய உடையைப் பெற்று வாழ்கிறது. அந்த உடம்புக்கு ஏற்பப் பெயர், வாழ்க்கை முறை முதலியவை அமைகின்றன. -

நடிகன் ஒரு நாள் கூத்துக்கு ஒரு கோலமாக ஆடை யணிகளே மாற்றுகிருன். உயிரோ ஒவ்வொரு பிறவியிலும் வெவ்வேறு உடம்பை எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் புகுகிறது. கடிகனுடைய நடிப்புக்கு நிலைக்களமாக நாடக அரங்கு இருப்பது போல, உயிர்கள் உடம்பை எடுத்து வாழும் வாழ்க்கைக் கூத்துக்கு அரங்காக இந்த உலகம் அமைந்திருக்கிறது. உடம்பெடுத்த மனிதர்கள் இந்த வாழ் விலே ஒன்றிப்போய் வாழ்கிருர்கள்.

உடம்பாகிய வேடம் புனேவது உயிர். அதுவே கூத்த அடைய கிலேயில் இருக்கிறது. அதல்ை அதனேக் கூத்த னென்றே ஒரு புலவர் சொல்கிருர்.

தோற்பையுள் நின்று தொழிலறச் செய்து ட்டும் கூத்தன்' என்பது காலடியாரில் வரும் பாட்டு.

வாழ்க்கையே ஒரு நாடகம், உலகமே ஒரு பேரரங்கு என்பதை ஆங்கில நாடகப் பெருங் கவிஞராகிய ஷேக்ஸ் பியர் அழகாகச் சொல்லியிருக்கிருர், குழந்தை முதல் கிழவன்வரை வெவ்வேறு பருவங்களில் உடலின் தோற்றம் மாறிப் போவதை வெவ்வேறு கோலமாக அவர் எடுத்துக் காட்டுகிரு.ர். ஒரு பிறவியிலே தோற்றும் மாற்றங்களையே வெவ்வேறு கோலமாக அவர் கூறினர். கம் காட்டுக் கவிஞர் ஓர் உயிரே வெவ்வேறு பிறவியில் வெவ்வேறு உருவமும் பெயரும் எடுத்து வாழ்வதை வெவ்வேறு நாடகப்

1. நாலடியார். 26.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/37&oldid=619649" இலிருந்து மீள்விக்கப்பட்டது