பக்கம்:முல்லை மணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முல்லே மணம்

ஆடும் கலைஞர்களைப்போல இருப்பினும் ஒரு பெரிய வேற் றுமை உண்டு. கலைஞர்கள் தம் அறிவுக்கும் அநுபவத்துக் கும் ஏற்பத் தாம் எப்படி நடிக்கவேண்டும் என்பதை உணர்ந்து ஆடுகிருர்கள். உயிர்கள் தாம் ஆடும் கூத்தின் தத்துவத்தை உணர்வதில்லே ; அடுத்த கோலம் இன்னது என்பதையும் தெரிந்துகொள்வதில்லை. ஏனெனின் அவர்கள் எல்லோரையும் ஆட்டுகிற கூத்தருட் கூத்தகிைய ஒருவன் இருக்கிருன். அவன் ஆட்டும் பாவைக் கூத்தாக வாழ்க்கை அமைகிறது. அதனுல்தான் மணிவாசகர்,

யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு வாளுகி நின்ருயை என் சொல்லி வாழ்த்துவனே !

என்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/42&oldid=619654" இலிருந்து மீள்விக்கப்பட்டது