பக்கம்:முல்லை மணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பிடிக்கத் தாதி உண்டு

பல காட்களுக்கு முன் நாடக மேடையில் பாடிவந்த

பாட்டு ஒன்று எங்கும் அடிபட்டுக்கொண்டிருந்தது.

கட்டிலுண்டு மெத்தையுண்டு-தங்கமே தங்கம் கால்பிடிக்கத் தாதியுண்டு-தங்கமே தங்கம் !

என்பது அந்தப் பாட்டு.

ஒருவன் ஒரு பெண்ணிடம் தன் வளவாழ்வைக் கூறு கிருன். " நீ என்னே மணம் செய்துகொண்டு விட்டால் என் மாளிகையில் சுகமாக வாழலாம். இன்ப வாழ்வுக் குரிய வசதிகளே உடையவன் தான். இனிய விருங்தை உண்டு கவலையின்றி உறங்கலாம்" என்று சொல்கிருன். வாழ்க்கையில் தலைமையான காரியங்கள் இரண்டு : உண்ப தும் உறங்குவதும். அந்த இரண்டும் சரியானபடி அமைக் தால் இன்பம்; இல்லாவிட்டால் துன்பங்தான்.

உறக்க இன்பம் கிடைக்கும் என்பதைச் சொல்கிருன். உறங்குவதற்கு வேண்டிய வசதிகள் இருக்கின்றனவாம். கட்டில் இருக்கிறது : மெத்தை இருக்கிறது : படுத்துக் கொண்டால் கால் பிடிக்கத் தாதிமார் இருக்கிருர்கள்.

கால் பிடித்தால் ஆாக்கம் வரும். அது ஒர் இரகசியம். கட்டிலும் மெத்தையும் உண்டாக்காத தாக்கம் கால் வருடில்ை வந்துவிடும். அதற்கென்று தாதியரும் ஏவலா ளர்களும் செல்வர்களின் வீட்டில் இருப்பார்கள்.

அன்புடைய காதலர்கள் கால் வருடும் பணியை எவ

லர்களுக்கு அளிக்கமாட்டார்கள். தம் கணவன்மாருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/43&oldid=619655" இலிருந்து மீள்விக்கப்பட்டது