பக்கம்:முல்லை மணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முல்லை மனம்

அடியை வருடி இளேப்பாற்றித் துரங்கச் செய்வது அன் புடைய மனைவியர் அறிந்த கலை. இலட்சிய மனேவியாக வாழ்ந்த திருவள்ளுவர் இல்லக்கிழத்தியாகிய வாசுகியார் இந்தக் கலையில் தேர்ந்தவர். தாமே அடிசில் அட்டு வள்ளு வருக்குப் பரிமாறும் அன்புடையவர். வள்ளுவருடைய உணவுக்கு இனிமையும் உறக்கத்துக்கு அமைதியும் தரும் பெருமாட்டியார் அவர். தம் கணவர் துயிலப் புகுந்தால் மெல்ல அவருடைய அடியை வருடுவார். அதனுல் இன்றுயில் நாயனரைக் கவ்விக் கொள்ளும். அவர் துரங்கியபின் துயில் வார் வாசுகியார். ஆனால், அவர் விழித்தெழுவதற்குமுன் எழுந்து விடுவாராம். வாசுகியாருடைய பிரிவில்ை வள்ளு வர் உறக்கத்தை இழந்தார். அடிவருடித் துரங்கும் பழக்கம் உடையவரல்லவா?

அடிசிற் கினியாளே! அன்புடைய மாதே! படிசொற் தவறாத பாவாய்! ‍_ அடிவருடி பின்தூங்கி முன்னெழுந்த பேதையே போதியோ என்தூங்கும் என்கண் இரா.

கால் பிடிக்கும் தாதியாக அன்புடைய மனைவியே பணி

செய்யும் இன்ப வாழ்வு வள்ளுவருக்கு வாய்த்தது.

அன்பு மிகுதியினல் காதலனும் காதலிக்குப் பணி விடை செய்வதுண்டு. உலகில் வாழ்ந்த மக்களைப் பற்றிச் சொன்னல் ஒருகால் சினம் அடைந்தாலும் அடையலாம். அருணகிரி நாதர் முருகனுடைய காதலைப் பாடுகிருர். அவன் வள்ளி நாயகியினிடம் வைத்த காதலால் அவளுக்குப் பலபடியாகப் பணிவிடை செய்து மகிழ்வதைப் பல இடங்களில் பாடியிருக்கிருர். கற்பனேயே ஆலுைம் அப்படிப் பாடுவதில் இன்பம் காணுவது பக்தர்களுக்கு இயல்பு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/44&oldid=959886" இலிருந்து மீள்விக்கப்பட்டது