பக்கம்:முல்லை மணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பிடிக்கத் தாதி உண்டு - 59

வள்ளி காயகியைத் துரங்க வைக்கிருன் முருகன். அடி வருடினுல் தாக்கம் வந்து விடுமல்லவா? அவன் வள்ளியின் பாதங்களே வருடுகிருளும்.

பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா ! என்று திருப்புகழில் வருகிறது.

-

கணவன் மனைவியரிடம் மாத்திரமா அன்பு இருக் கிறது ? தங்தைக்கும் மகனுக்கும் இடையே அன்பு உண்டு: தாய்க்கும் குழந்தைக்கும் இடையே அன்பு உண்டு : ஆசிரி யனுக்கு மாணுக்கனிடம் அன்பு உண்டு; நண்பர்களிடையே அன்பு உண்டு. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அன்பினல் கால் வருடும் பணியை யாரும் மேம் கொள்ளலாம். - -

இந்த உண்மையைக் கண்ணன் புலப்படுத்தினன். அவனேத் தேடிக்கொண்டு அவனுடைய இளம்பருவ கன்ப சான குசேலர் வருகிரு.ர். அவன் வாழும் துவாரகையை கோக்கிப் பல காவதம் கடந்து வருகிருர், மெலிந்த உடலும் தவத்தாற் சுருங்கிய உணவும் படைத்த அவர் எப்படியோ கண்ணனை அடைந்து விடுகிருர் கண்ணன் அவரைக் கண்டவுடன் ஆராத காதல் மீதுTர ஓடிச் சென்று தழுவிக் கொள்கிருன். வேண்டிய உபசாரங்களைச் செய்கிருன். அறுசுவை உண்டி அளிக்கிருன். உண்ட பிறகு இளைப் பாறச் செய்கிருன். கட்டிலப் போட்டு மெத்தையை விரித்துப் படுத்துக்கொள்ளச் செய்கிருன். "பாவம், எவ் வளவு தாரம் கடந்து வந்திருக்கிருய் ! சுகமாகத் துரங்கு ' என்று சொல்லிக் கால்களை வருடுகிருன். இந்த மலரடி இரண்டும் வழி கடந்து இளேப்புற்றனவே !' என்று சொல்லிச் சொல்லி வருடுகிருன். அப்படி வருடும்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/45&oldid=619657" இலிருந்து மீள்விக்கப்பட்டது