பக்கம்:முல்லை மணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பிடிக்கத் தாதி உண்டு 43

ஏவல் செய்வதையே கால் கை பிடித்தல் என்று சொல் லும் வழக்கம் உண்டு. ஒருவர் மனத்தைக் குளிரப்பண்ண அவர் குறிப்பறிந்து ஏவல் செய்வது ஒரு வழி ; அவர் கால் கை பிடிப்பது ஒரு முறை.

கால் கை பிடித்தால் காரியத்தைச் சாதிக்கலாம். அதையே, காக்கை பிடித்துக் காரியத்தைச் சாதிக்கிருன்’ என்று சிதைத்து வழங்குகிருர்கள். இன்று எல்லோரும் அடிக்கடி வழங்கும் 'காக்கை பிடிக்கிற” செயல் கால் கை பிடிக்கிறதையே குறிக்கிறது. கால் கை சிதைந்து காக்கை ஆகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/49&oldid=619661" இலிருந்து மீள்விக்கப்பட்டது